விஜய்க்கு 24 மணி நேரமும் அறிவுரை சொல்லும் திமுக: அண்ணாமலை கிண்டல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கரூர்: தவெக தலைவர் விஜய் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக்கூடாது என 24 மணி நேரமும் அறிவுரை வழங்குவதே திமுகவின் வேலையாகிவிட்டது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இபிஎஸ் கருத்து
கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் உடன் கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் எதுவும் சொல்லவில்லை. யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என நேற்றும்( மார்ச் 15), நேற்று முன்தினமும் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறிவிட்டார். அதோடு முடிந்ததாக தான் நாங்கள் பார்க்கிறோம். கூட்டணி குறித்து உள்கட்சி கூட்டம் போட்டது தவெகவினர். வீடியோ அழைப்பில் பேசினர். பேசியது அவர்கள் தான். அவர்களிடம் கேட்க வேண்டும். எங்களின் கூட்டணியின் தலைவர், முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் கருத்துதான் இறுதிக்கருத்தாக நாங்கள் பார்க்கிறோம். கூட்டணியை அவர் தான் வழிநடத்துகிறார். அவர் முதல்வர் வேட்பாளர். அதிக இடத்தில் அதிமுக நிற்கப் போகிறது. இபிஎஸ் முடிவு தான் எல்லோர் முடிவும் கூட. நான் தனியாக கருத்து சொல்லவிரும்பவில்லை. நேற்று முன்தினம் அவர் கருத்தை தான் இறுதிக் கருத்தாக பார்க்கிறோம். மாற்றம் இருக்கிறது இபிஎஸ் சொல்வார்.ஏன் பேச வேண்டும்
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நாங்கள் கூட்டவில்லை. தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினால், எதற்கு கூட்டம் போட்டீஸ்கள், என்ன முடிவு எடுத்தீர்கள் என அவர்களிடம் கேட்க வேண்டும். இல்லாத விஷயத்தை பற்றி நான் ஏன் பேச வேண்டும்.பதற்றம்
திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுவதை எல்லாம் கருத்தாக எடுத்துக் கொள்ளலாமா? நேற்று முன்தினம் முதல் திமுக பதற்றத்தில் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்து கிட்டதட்ட வெளியே போய்விட்டனர். திருமாவளவன் கூட்டணி பேச்சுவார்த்தை பக்கமே வரவில்லை. எத்தனையோ கட்சிகள் வர மாட்டோம் என அசமாதானத்தை வெளிப்படுத்துகின்றனர். அதனை கண்டுகொள்ளாமல், விஜய் எப்படி இருக்க வேண்டும்; இருக்கக்கூடாது என வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் அறிவுரை வழங்குவதே திமுகவின் வேலையாக போய்விட்டது.திருமாவளவனும் அறிவுரை வழங்குகிறார். 4 நாட்கள் முன்னர், திருமாவளவனை பொறுத்தவரை விஜய் ஆர்எஸ்எஸ் ஆள். நேற்று திருமாவளவனை பொறுத்தவரை விஜய், கூட்டணிக்கு வரக்கூடாது. ஏதோ ஒரு முடிவு எடுத்து திருமாவளவன் சொல்லட்டும். அவரை பொறுத்த வரை ஆர்எஸ்எஸ் ஆளான விஜய், கூட்டணிக்கு வரக்கூடாது என எப்படி சொல்வார். தேவையில்லாத கருத்துகளை வைக்கின்றனர். டிகேஎஸ் இளங்கோவன் கருத்தை அதில் தான் பார்க்கிறோம். கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கட்சி உத்தரவிட்டுள்ளது. தொண்டர்களில் ஒருவனாக அடுத்து வரும் நாட்களில் பிரசாரம் செய்ய உள்ளேன். கூட்டணியில் அனைவரும் வெற்றி பெற வேண்டும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நேரமும், காலமும் வரும் போது நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசுவோம்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அண்ணாமலை சார் எவ்வளவே சொன்னார் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று அமித்ஷா அவர்கள் கேட்காமல் அவசர முடிவுகளை எடுத்து விட்டார் இல்லை என்றால் விஜய் கூட்டணி வைத்து இருக்கலாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
வாயை வாடகைக்கு விட வேண்டாம் என்று சிவநாயகம் கூறுகிறார்
இவர் DMK உடைய ஸ்லீப்பர் செல் ஆகி பல நாட்கள் ஆகிறது
அண்ணாமலை அவர்களின் பேச்சில் தெளிவும் நல்லெண்ணமும் தெரிகிறது...வாழ்த்துக்கள்.நன்றி.
அண்ணாமலை போன்ற நேர்மையாளர் உண்மையை உரக்க கூறுவது, திமுக வின் ஊழல்வாதிகளுக்கு எரிச்சலை உருவாக்கவே செய்யும்
All ₹200 should buy gelusil for ever
We could see more matured dialogue from Annamalai Ji and very transparent and careful delivery to maintain relationships but I feel it's not worth maintaining admk alliance and all these compromises.
இந்த அதிகப் பிரசங்கியை கட்சித் தலைவர் பதவியில் இருந்து தூக்கி ரொம்ப காலம் ஆகிவிட்டது இன்னுமே இவர் தான் தலைவர் என்ற நினைப்பில் ஏன் இவ்வளவு உளறல்??
அவர் உண்மையை சொன்னால் உனக்கு ஏன் எரியுது?
அப்பத்துக்கு மதம் மாறிய பாவாடை கும்பல்களுக்கு அண்ணாமலையை பார்த்தால் எரிச்சலும் பொறாமையும் வருவது இயல்புதானே!
அரைவேக்காடு சின்னப்பன் சொம்பு கொடுத்தாலே முட்டு கொடுப்பார்...இப்போ அண்டா வாங்கிட்டாரு..கேக்கணுமே
உளறுவதற்கும் உளறுவதை பீத்திக்குறதுக்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டமில் நாட்டில் இருக்காரு. அவுரு பேரு முகஸ் ன்னு சொல்றாய்ங்க. அவுரு பொம்மை முதல்வருன்னும் சொல்றாய்ங்க. கவர்மெண்ட் டில் இருந்து தெண்டசம்பளம் வாங்கும் கேஸுன்னு சொல்றாய்ங்க. ஓசி காருன்னு சொல்றாய்ங்க. கவர்மெண்டில் தெண்ட சம்பளம் வாங்குவதை பத்தி க உ பீஸ் எவனும் பேச மாட்டானுங்க. அடுத்தவனை பத்தி பேசி அகமகிழ்ந்து போவானுங்க. இருக்குற எடம் அப்புடி..
தங்கம் கடையில் இருந்தாலும் கழுத்தில் இருந்தாலும் மதிப்பு மாறாது.....அண்ணாமலை தலைவராக இருந்தாலும் தொண்டராக இருந்தாலும் மவுசு மாறாது.....இது அறிவாலய அடைப்பு எடுப்பவர்களுக்கு தெரியாது.....!!!
திருடர்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினரா
யாருக்கு எரியுது??
இன்று முதல் நீ சின்ன புத்தி சின்னப்பா
பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி முறிவு? புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சிக்கல்
மார் 17, 2026 07:05 am
திமுகவின் பண பலம் ஜெயிக்காது; மக்களின் மனபலம் ஜெயிக்கும்: நயினார் நாகேந்திரன்
மார் 17, 2026 10:43 am
லாட்ஜ், திருமண மண்டப உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை! வெளி நபர்களை கண்காணிக்க அறிவுறுத்தல்
மார் 17, 2026 04:55 am