தி.மு.க., நிர்வாகியின் மூக்குடைத்த அமைச்சர்; தி.மு.க.,வில் ஒரு சமூகம் புறக்கணிப்பு
மானாமதுரையில், எம்.எல்.ஏ., தமிழரசிக்கு 'சீட்' கிடைக்கக்கூடாது என, நகராட்சி தலைவருக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சி மாவட்ட நிர்வாகியை 'மூக்குடைப்பு' செய்து விட்டார் அமைச்சர் என, கட்சியினர் புலம்பி தவிக்கின்றனர். மானாமதுரை (தனி) தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட தற்போதைய எம்.எல்.ஏ., தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரும் தி.மு.க., மாவட்ட துணைச் செயலருமான சேங்கை மாறன், தமிழரசியை மானாமதுரை தொகுதியில் இருந்து ஓரங்கட்டும் நோக்கிலும், மானாமதுரை நகரா ட்சி தலைவர் மாரியப்பன் கென்னடிக்கு ஆதரவாகவும் செயல்பட்டுஉள்ளார். இத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் கனிமொழி கோட்டாவில் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில், நான்காவது இடத்தில் மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி உள்ளார். இதனால், மானாமதுரையில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இதை அறிந்து கொண்ட அமைச்சர் பெரியகருப்பன், தமிழரசிக்கு தானாக முன்வந்து டிபாசிட் தொகை செலுத்தி அவரை விருப்ப மனுவழங்க செய்துள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதனால் தி.மு.க.,வில் உள்ள முக்குலத்தோர் சமூகத்தினரை ஓரங்கட்டும் விதமாக அமைச்சர் பெரியகருப்பனின் செயல்பாடு இருக்கிறது என, தலைமையிடம் தி.மு.க.,வினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
எட்டு தேர்தல்களாக களம் கண்ட மாஜி மகனுக்கு வழிவிட்டு கட்சி பணியில் கவனம்
மார் 29, 2026 03:57 am
இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா?: சீமானின் ஆவேச கேள்வியால் மக்கள் அதிர்ச்சி!
மார் 29, 2026 04:20 am
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
மார் 29, 2026 11:49 am