முஸ்லிம் லீக், ம.ம.க.,வுக்கு தி.மு.க., 2 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா, இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நேற்று இரவு, முதல் கட்சியாக முஸ்லிம் லீக், அதைத் தொடர்ந்து ம.ம.க.,வுடன் தி.மு.க., உடன்பாடு செய்தது. இரு கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. உடன்பாடு கையெழுத்தானதும் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டி: அண்ணாதுரை காலம் முதல் தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீக் உள்ளது. எந்த தேர்தலாக இருந்தாலும் முஸ்லிம் லீக் கட்சியை முதலாவதாக அழைத்து, தொகுதிப் பங்கீடு செய்வதை தி.மு.க., வழக்கமாக கொண்டுள்ளது. அந்த அடிப்படையில், இந்த தேர்தலிலும் தி.மு.க., உடன்பாடு செய்துள்ளது. கடந்த தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டோம். இப்போது, இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கின்றனர். எனவே, புதுச்சேரியில் ஒரு தொகுதி வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம். காங்கிரசுடன் பேசி நல்ல முடிவை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா, ''வரும் தேர்தலில், ம.ம.க., இரண்டு தொகுதிகளில் போட்டியிடும். கடந்த தேர்தலில் பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் போட்டியிட்டு வென்றோம். இப்போது, எங்கே போட்டியிடுவது என விரைவில் முடிவு செய்வோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்,'' என்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதுவே அதிகம். சீட்டை கூட்டினால் திராவிடத்திற்கே ஆப்பு வைப்பான்.
ஒட்டுமொத்தத்தில் 4 சீட், என்னங்கண்ணா திருமா அப்படியென்றால் உங்களுக்கு 8 சீட் , காங் 32 சீட் ?
இருவருக்கும் இதயதில்தான் இடம் கிடக்கிமோ என உள்ளாடை நனைய சென்றவர்களுக்கு மலேசிய இரட்டை கோபுர மழிச்சி என்பது புரிந்துகொள்ளமுடிகிறது . இந்த இரண்டு அமைப்புடன் ஒப்பந்தம் போடப்பட்டது மதச்சார்பின்மைக்கு தலைசிறந்த உதாரணம்.
ஒன்று அல்லது இரண்டு சீட்டு வாங்கிவிட்டு வெளியில் வந்து இமயமலை உச்சி மீது ஏறி சாதனை புரிந்தால் போன்று மார்தட்டுகிறார்கள். உள்ளே வாங்கிய அடியின் வலி முகத்தில் தெரிகிறது.
மேலும் செய்திகள்
த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம் பிசுபிசுத்தது; கட்சியினர் அதிர்ச்சி
மார் 02, 2026 05:29 am
தி.மு.க., தரும் 25 தொகுதி ஏற்புடையதல்ல: காங்., கிரீஷ் ஷோடங்கர் மீண்டும் அதிரடி
மார் 02, 2026 05:11 am
தொகுதி பங்கீடு குழு அமைப்பதில் மெத்தனம்; பழனிசாமி மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி
மார் 02, 2026 05:19 am
தனி சின்னத்தில் போட்டியிட்டால் 3 சீட் தான்; தி.மு.க., நிபந்தனையால் வைகோ அப்செட்
மார் 02, 2026 05:24 am