/ செய்திகள் /  உத்தரவாதம் அளித்தால் அண்ணாமலை போட்டி

 உத்தரவாதம் அளித்தால் அண்ணாமலை போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுத்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., வேட்பாளர்களுக்காக நேற்று காலை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை. அப்போது மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலிடம் இருந்து போன் வந்தது. எடுத்து பேசிய அண்ணாமலையிடம்,''கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் உள்ளது. நீங்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். உடனடியாக புறப்பட்டு, சென்னை வர வேண்டும். ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்கிறேன்,'' என சொல்லி, அவரை சென்னைக்கு அவசரமாக வரவழைத்தார் பீயூஷ் கோயல். அதையடுத்து அவர், சென்னை கமலாலயத்தில் நடந்த மையக் குழு கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக 'நீங்கள், வரும் சட்டசபைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும். இது கட்சித் தலைமையின் விருப்பம். மற்ற எல்லா தலைவர்களும் தேர்தலில் போட்டியிடும்போது, நீங்கள் மட்டும் ஒதுங்கினால், கட்சிக்குள் ஏதோ குழப்பம் இருப்பது போன்ற எண்ணம் வெளிப்படுகிறது. 'அ.தி.மு.க.,விடம் இருந்து பா.ஜ.,வுக்கு பெறப்பட்டிருக்கும் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட வேண்டும்' என்று பீயூஷ் கோயல் வலியுறுத்திச் சொல்ல, முதலில் அதை மறுத்திருக்கிறார் அண்ணாமலை. தொடர்ந்தும், அண்ணாமலையை போட்டியிடச் சொல்லி வலியுறுத்தி உள்ளார், கோயல். ஆனால், அண்ணாமலை பிடிகொடுக்கவில்லை என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தலில் போட்டியிட கட்சி தலைமையிடம் இருந்து உத்தரவாதம் எதிர்பார்ப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

S.V.Srinivasan
ஏப் 02, 2026 09:18

அ தி மு கவுடன் கூட்டணி வைக்கும்போதே தெரியும், எடப்பாடி எதாவது உள்ளடி வேலை செய்து அண்ணாமலையை ஓரம் கட்டி விடுவார் என்று. பி ஜே பி டெல்லி மேலிடமும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள எந்த முனைப்பும் காட்டாமல் அண்ணாமலையை பலி கடா ஆக்கிவிட்டு கடைசி நேரத்தில் அண்ணாமலையிடம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று ஒப்புக்கு கேட்டு விட்டு, தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். சென்ற தேர்தலில் கிடைத்த 4 சீட் கிடைக்குமா என்பது சந்தேகம். பொறுத்திருந்து பார்ப்போம்.


Natchimuthu Chithiraisamy
ஏப் 01, 2026 18:19

இந்த நம்பிக்கை அண்ணாமலையிடம் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.


கேடி ராகவன் ஐயங்கார்
ஏப் 01, 2026 15:45

எடப்பாடி மீது பல விமரிசனங்கள் எனக்குண்டு. ஆனால் இந்த முறை மிக சாதுர்யமாக மற்றும் சாணக்யத்தனத்துடன் தொகுதி ஒதுக்கீடு செய்து தன்னுடைய திட்டத்தை செயல்படுத்திக்கொண்டார். எதாவது எண்ணிக்கையில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைந்தால் தானே ஆட்சியில் பங்கு என்று கோரிக்கை வைக்கமுடியும் ? அதற்கான வாய்ப்பை முழுதுமாக அவர்களாகவே இழக்கவைத்துவிட்டால் ?? இலைமறை காய்மறையாக இருந்த பிஜேபி உள்கட்சி பூசலை வெளிக்கொணர அற்புதமான தொகுதி ஒதுக்கீடு செய்து இந்த கட்சியின் ஒற்றுமை அடிப்படையையே ஆட்டம் காணவைத்துவிட்டார் . இன்னும் வேட்பாளர் அறிவிப்பை செய்யமுடியாத வகையில் அற்புதமான செக் வைத்துவிட்டார். இந்த செக் மேட் தேர்தல் முடிவிலும் சர்வநிச்சயம் எதிரொலிக்கும் .


K V Ramadoss
ஏப் 06, 2026 13:44

இந்த தவறை பிஜேபி மேலிடம் இப்போது உணர்ந்திருக்கும்.


Gnana Subramani
ஏப் 01, 2026 13:12

கட்சி சீட் தான் கொடுக்கும். அவர் தான் முயற்சி செய்து வெல்ல வேண்டும்.


Gnana Subramani
ஏப் 01, 2026 13:10

அண்ணாமலை எடப்பாடியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டால் ஜெயிக்க வைப்பார்


Muralidharan S
ஏப் 01, 2026 11:26

இரண்டு திராவிஷ கட்சிகளும் மூன்றாவது ஒரு கட்சியையோ அல்லது மூன்றாவதாக ஒரு தலைவரையோ தமிழகத்தில் தலையெடுக்க விடமாட்டார்கள்.. அண்ணாமலை இல்லாத பாஜகவிற்கு நோட்டாவிற்கும் கீழ்த்தான் வாக்குகள் கிடைத்துவந்தது.. 18 சதவிகிதமாக பாடுபட்டு உயர்த்தியவர் அண்ணாமலைதான்.. இதை புரிந்துகொள்ளாத பாஜக அதிமுகவின் வலையில் மாட்டிக்கொண்டு அண்ணாமலை அவர்களை தூரத்தில் வைத்துவிட்டது... பாஜகவிலேயே பலர் சமயம் பார்த்து கழுத்தை மறுத்துவிட்டனர்... அண்ணாமலையின் வளர்ச்சியை பொறுக்காத தமிழிசை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவிற்குள் அரசியல் செய்ய மீண்டும் நுழைந்தார்.. இது தவிர நாயனார், வானதி.. இவர்களை எல்லாம் தாண்டி அண்ணாமலை வளர்ந்தது யாருக்கும் பிடிக்கவில்லை.. இவர்களில் எத்தனை பேர் கட்சியை வளர்த்துவிட்டார்கள்.. ??? கட்சி அழிந்தாலும் பரவாயில்லை.. அண்ணாமலையை ஒதுக்கவேண்டும் என்று உட்கட்சியிலும், அதிமுகாவுடனும் கூட்டணி அமைத்தனர்.. இதனால் அண்ணாமலை அவர்களுக்கு ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை.. அண்ணாமலை இல்லாத பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் வளர முடியாது... தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அனைவரும் வருந்துவார்கள்..


K V Ramadoss
ஏப் 06, 2026 13:54

உண்மை என்னவென்றால் அண்ணாமலை வந்துவிடக்கூடாது என்பதில், திமுக, அதிமுக, தமிழக பிஜேபியில் சுயநலம் மிக்க பழைய தலைவர்கள் யாவரும் ஒருமித்த கருத்துடன், ரகசியமாக ஓன்று சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர். ஏனென்றால், அண்ணாமலை தலையெடுத்தால் இவர்கள் அனைவருக்கும் பிழைப்பு போய்விடும் என்பது மட்டுமல்ல, இதில் பலர் சிறை செல்ல வேண்டியிருக்கலாம். நேர்மை, நாணயம், கண்டிப்பு இவற்றை கண்டாலேயே இன்றைய அரசியல்வாதிகளுக்கு பேதிவந்துவிடும். எப்படி பிஜேபி தலைமை இதை உணராமல் இருந்திருக்கின்றனர் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். அது தமிழகத்தில் தோற்றுவிட்டது


Ramanujadasan
ஏப் 01, 2026 11:07

மோடியை எடுத்து கொள்ளுங்கள் , இரண்டாயிரம் ஆண்டு வரை அவரை தெரிந்தோர் சிலரே . அவருடைய உழைப்பை காணுங்கள் சங்கியாக வாழ்ந்தார் , வாழுகிறார் . கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிகிறார் . இவரே ஒவ்வொரு பிஜேபி காரனுக்கும் முன்னுதாரணம் . கடமையி செய் பலனை எதிர்பாராதே . அதுவே உன்னை தேடி வரும் .


Ramanujadasan
ஏப் 01, 2026 11:04

அண்ணாமலை ஒன்றும் கொள்ளை பிடிப்புள்ள திராவிடன் கிடையாது . கொள்கை பிடிப்புள்ள சங்கி . ஒவ்வொரு சங்கிக்கும் தனது உழைப்புக்கேற்ற , தகுதிக்கேட்ப பதவிகள் கிடைக்கும் என தெரியும் . சிறிது காலம் பிடிக்கலாம் , பொறுத்தார் பூமியாளுவர் என கொண்டு கடைமைகளை செய்து உயர்பதவிகளை பெற வாழ்த்துகிறேன்


Anbuselvan
ஏப் 01, 2026 11:02

அண்ணாமலை அவர்கள் காலத்தில் போட்டி விட்டால்தான் பிஜேபிக்கு ஏதாவது தேறும். இல்லையேல் இம்முறை 4 சீட் கூட வராது.


Madras Madra
ஏப் 01, 2026 10:54

முதலில் அண்ணாமலையை போட்டிக்கு ஒப்பு கொள்ள வைத்து பின் நல்லா தோற்க கூடிய தொகுதியில் நிற்க வைத்து மொத்தமாக தமிழ் நாட்டில் இருந்து அவரை விரட்டி அடிக்கவே இத்தனை சதி ஆலோசனைகளும் அண்ணாமலை தமிழ் நாட்டில் இருப்பது இங்கே யாருக்கும் பிடிக்கவில்லை அவர் இங்கே தொடர்ந்து இருப்பது பல கும்பல்களுக்கு பதற்றமாகவே இருக்கிறது பேசாமல் அண்ணாமலை அவர்கள் தனி கட்சி ஆரம்பித்து கௌரவமாக களம் காணலாம்