தி.மு.க., சீட்டுக்கு அ.தி.மு.க., பரிந்துரை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சேலம் மாவட்டம் ஏற்காடு, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி. அங்கு, 2006க்கு பின், தி.மு.க., வென்றதில்லை; அ.தி.மு.க., கோட்டையாக உள்ளது. தற்போது, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களால், தி.மு.க.,வுக்கு சாதகமாக தொகுதி இருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு, 10க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, அவரது அயராத கட்சிப் பணியோ, தி.மு.க., நிர்வாகிகளின் சிபாரிசோ காரணம் இல்லை. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்தான் காரணம் என்ற தகவலால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவலம் மட்டும் இல்லை, அசிகாமமும்கூட. ஒருத்தருக்கு மற்றொருவர் மூலம் மாற்று கட்ச்சியில் உதவி செய்துகொண்டு, ஆண்டாண்டு காலமாக நடக்கும் உள்குத்து வேலை.
திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தான் வேறு. ஆனால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். பாவம் தொண்டர்கள் என் கட்சி பெரிசு என்று அப்பாவியாக உள்ளார்கள். எந்த தொண்டனாவது மேலே வந்தது உண்டா. தொண்டர்கள் எப்போதும் எடுபிடி யாக தான் இருக்க வேண்டும். அதே போல் தமிழக மக்களும் இலவசத்திற்கு ஏங்கும் பிச்சைக்காரர்களை போல் இருக்க வேண்டும். அப்போது தான் அரசியல் செய்ய முடியும்
பெருந்தலைவர் காமராஜர் அன்னைக்கே சொல்லிட்டாரே. திராவிட கட்சிகள் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். விஜய பாஸ்கர் எவ்வளவு கமிஷன் பேசிருக்காரோ? ஆண்டவா தமிழகத்தை காப்பாற்ற மாட்டாயா?
ஊழல் எந்த அளவிற்கு ,தமிழக மக்களுக்கு எதிராக வேலை செய்கிறது ,என்பதற்கு உதாரணம்
திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இந்த திராவிட கும்பல்கள் வேறும் வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க படவேண்டியவை. தமிழகத்தின் அழிவு சின்னங்கள் திராவிட கும்பல்கள்.
Two Mattai One Kuttai Correct!