தி.மு.க.,வுக்கு முஸ்லிம் ஓட்டு முழுமையாக கிடைக்காது!

நாங்கள் மட்டுமே பா.ஜ.,வை கடுமை யாக எதிர்க்கிறோம். அதன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள எங்களுக்கு ஓட்டளியுங்கள் என தி.மு.க.,வும், அதன் கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளும் பிரசாரம் செய்கின்றன.

அத்துடன், முஸ்லிம் ஓட்டுகள் அ.தி.மு.க., பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக தி.மு.க.,வினர் பொதுவெளியில் செய்தி பரப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் முஸ்லிம்களை தி.மு.க., எப்படி நடத்துகிறது?

தி.மு.க., கட்சிக்குள்ளேயே முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கிறது என்று அந்த கட்சி நிர்வாகிகள் பட்டியலை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில், தி.மு.க.,வின் கட்சியின் பொருளாளராக இருந்தவர் மறைந்த சாதிக் பாட்சா, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், மற்றும் ஆயிரம் விளக்கு உசேன், நாகூர் ஹனிபா என அந்த பட்டியல் பெரிது. இன்றளவும் நாகூர் ஹனீபா பாடலை தவிர்த்து தி.மு.க., மேடை இல்லை என்னும் அளவுக்கு கட்சிக்காகவும் கொள்கைக்காகவும் பாடுபட்டனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். ஆனால், சமீப காலமாக இதில் பயணிப்பவர்களுக்கு உரிய வாய்ப்பை தி.மு.க., வழங்கவில்லை. மாறாக புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தி.மு.க.,வில் இருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதனால், புதிய தலைமுறையினர் யாரும் தி.மு.க.,வில் பயணிப்பது இல்லை. கட்சியின் முக்கிய தலைவர்களின் வாரிசுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் முஸ்லிம் வாரிசுகளுக்கு இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டும் சிறு பொறுப்புகளில் இருக்கின்றனர்.

ஆட்சியில் இடம் இல்லை



முஸ்லிம் லீக் தவிர, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க., 'சீட்' ஒதுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் “நாங்கள் வலிமையுடன் இருக்கிறோம். மிகுந்த வலியோடு தி.மு.க.,வை ஆதரிக்கிறோம். ஆனால், எங்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கவில்லை,” என வெளிப்படையாக தம் கவலையை கூறினார்.

பொதுவாக குறிப்பிட்ட ஒரு தொகுதி யில் இரண்டுமுறை முஸ்லிம் லீக் வெற்றி பெறுவதை ஒருபோதும் தி.மு.க., ஏற்கமாட்டார்கள். அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தி.மு.க., கூட்டணி யில் ராமநாதபுரத்தில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தொடர்ந்து அதே தொகுதியில் நிற்பதால், பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கிறார். இது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் கட்சிகளுக்கும் வெளிப்படையான ஆதரவு தருவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற தயக்கம் தி.மு.க.,விலுள்ள அனைத்து தரப்பு நிர்வாகிகளிடமும் உள்ளது. இந்த தேர்தலில், முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக கருதப்படும் சமுதாயத் தலைவர்களை பெரிய அளவில் பிரசாரத்தில், தி.மு.க., ஈடுபடுத்தவில்லை.

முஸ்லிம்களின் அடிப்படை பிரச்னைகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு, முஸ்லிம்களின் வாக்கு வங்கியை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக, அவர்களின் பாதுகாப்பு தொடர்பானவற்றை மட்டும் பேசுவதற்குக் காரணம், ஹிந்து ஒருங்கிணைப்பு அல்லது ஹிந்து பெரும்பான்மைவாதம் குறித்த அச்சமே.

முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் வாயிலாக, முஸ்லிம்களின் ஓட்டுகளைப் பெறுவதை தி.மு.க., விரும்ப வில்லை. முஸ்லிம்களிடம் நேரடி உறவை உருவாக்கவே விரும்புகிறது. அதற்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு என்ற அபாயகரமான ஒரு அெஜன்டாவை தி.மு.க., முன்வைக்கிறது. முஸ்லிம்களுக்காக இதுமட்டும்தான் அதன் அெஜன்டா. முஸ்லிம் முன்னேற்றமோ, வளர்ச்சியோ அல்ல.

அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு



ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் தி.மு.க., ஆதரவாளர்களாகவே இருந்தனர். அதற்கு முக்கிய காரணம் ஆரம்ப காலத்தில் தி.மு.க., வளர்ச்சியில் பங்காற்றிய முஸ்லிம்கள். ஆனால், காலப்போக்கில் அந்த நிலை தலைகீழாக மாறியதுதான் வரலாறு.

கடந்த, 1998 கோவை சம்பவத்தை அன்றைய தி.மு.க., அரசின் காவல்துறை எதிர்கொண்ட விதம். தொடர்ச்சியாக குற்றவாளிகளோடு எண்ணற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது, தமிழகம் முழுதும் காவல் துறை சோதனை என்ற பெயரில் நடத்திய கொடுமைகளை இன்றளவும் முஸ்லிம் சமுதாயம் மறக்கவில்லை.

அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி வரும்போதெல்லாம் முஸ்லிம்களை சிறைக்கு அனுப்பி, தமிழகத்தையே திறந்தவெளி சிறைச்சாலை ஆக்கியது தி.மு.க., அரசு. எல்லாவற்றிற்கும் மேலாக பா.ஜ., வுடன் தி.மு.க., கூட்டணி வைத்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த, 2001ல் நடந்த தேர்தலில் முஸ்லிம்களின் பெருவாரியான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., முஸ்லிம்களுக்கு ஒரு விடியலை தந்தது.

தி.மு.க., ஆதரவு என்ற முஸ்லிம்களின் கண்ணோட்டம் மாறி, அ.தி.மு.க., பக்கம் திரும்பியது. அது ஜெயலலிதா இருக்கும்வரை தொடர்ந்தது. அவர், புதிய தலைமுறை முஸ்லிம் அமைப்புகளுக்கு சீட் கொடுத்தார். சட்டசபை உறுப்பினராக அமர வைத்தார். அவரது கட்சியிலும் அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்தார். ஒருபோதும் நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்தார்.

முகம் கொடுக்கவில்லை



தற்போது பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., - பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து இருப்பதில் முஸ்லிம் மக்களிடையே ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கு ஒரு தொகுதியை கொடுத்ததுடன் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசியின் ஆதரவுடன் களமிறங்கும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., கூட்டணி, ஜெயலலிதா பெற்ற சிறுபான்மை மக்களின் ஆதரவை பெறுவார் என்பதே பலரின் கணிப்பு.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க., விற்கு முஸ்லிம் வாக்காளர்கள் முகம் கொடுக்கவில்லை. காரணம் பா.ஜ.,வுடனான கூட்டணி. தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வுடனான உறவில் இருந்துவிட்டு வெளியில் வந்தவர்கள் தான். ஆனால், தற்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அ.தி.மு.க.,வுக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு பெருகி வருவதாக அக்கட்சி பிரமுகர்களே பெருமிதம் கொள்கின்றனர்.

தற்போது நடக்கவிருக்கும் பார்லி மென்ட் தேர்தலில் தி.மு.க., கூட்டணி கடந்த தேர்தலைப் போல் சிறுபான்மை வாக்குகளை முற்றிலுமாக பெறுவதற்கான வாய்ப்பு குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

-புதுமடம் ஜாபர்அலி, பத்திரிகையாளர்


N.Purushothaman - Cuddalore, மலேஷியா
12-ஏப்-2024 17:44 Report Abuse
N.Purushothaman இஸ்லாமிய மக்கள் என்று ஜாமத் என்கிற அமைப்பு சொல்வதற்க்கேற்ப ஓட்டு போடுவதை நிறுத்தி தங்களுக்கு எந்த ஆட்சியால் என்ன லாபம் நாட்டிற்கு என்ன பயன் என்கிற சிந்தனையை கையில் எடுக்கிறார்களோ அன்று தான் அவர்களுக்கு விடிவு காலம் .... அதே போல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவோம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம்ன்னு கூவரவனுங்களை புறம்தள்ளி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தேசபக்தியுடன் திகழ வேண்டும் என்கிற எண்ணம் வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும் ....
Baskaran - திருவண்ணாமலை, இந்தியா
12-ஏப்-2024 17:14 Report Abuse
Baskaran பிஜேபி எப்பொழுதுமே சிறுபான்மையினர் அல்லது பெருபான்மையினர் என்று அரசியல் செய்தது கிடையாது. பிஜேபியின் திட்டங்கள் அனைத்தும் பொதுவானவையே.இதில் மதம் பார்ப்பதில்லை. மற்ற காட்சிகள் அனைத்தும் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.இவர்களை ஓடஓட விரட்டுங்கள்.
கனோஜ் ஆங்ரே - மும்பை, இந்தியா
12-ஏப்-2024 13:38 Report Abuse
கனோஜ் ஆங்ரே எல்லா சிறுபான்மையினரும் பாஜக...வின் தாமரைக்குத்தான் ஓட்டுப் போடப் போறாங்க... வாயத் தொறந்திட்டு உட்கார்ந்திரு.
sridhar - Chennai, இந்தியா
12-ஏப்-2024 12:27 Report Abuse
sridhar சின்ன திருத்தம், சிந்தித்து வாக்களிக்கும் முஸ்லிம்கள் வோட்டு திமுகவுக்கு கிடையாது. ஆட்டு மந்தைகள் வாக்கு எப்போதும் திமுகவுக்கு தான்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்