சீக்ரெட் கார்னர்

இரு திராவிட இயக்கங்களும் தேர்தல் செலவுக்கான முதல் தொகையாக, 100 லட்சங்களை கொடுத்து விட்ட நிலையில், அதைச் சொல்லியே கட்சித் தலைமைக்கு தாமரை கட்சி வேட்பாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, முதல் கட்டமாக தொகுதிக்கு 50 லட்சங்களை அனுப்பி இருக்கிறது. இப்போது இதை வைத்து என்ன செய்வது என்று சொல்லி கூடுதல் தொகை கேட்கின்றனராம்.

பிரசார நேரம் போக மற்ற நேரங்களில் வீட்டில் இருக்கும் இலை கட்சித் தலைவர்களை பார்க்க வரும் இரண்டாம் கட்டத் தலைவர்கள், கள நிலவரம் குறித்து கலவரமாகச் சொன்னால், அதை ஏற்க மறுக்கிறாராம் தலைவர். எனக்கு கிடைத்திருக்கும் தகவல்படி, தமிழகத்தின் மொத்த தொகுதிகளில், 70 சதவீத இடங்களில் நமக்குத்தான் வெற்றி. அதனால், போய் தைரியமா வேலை பாருங்கன்னு சொல்றாராம்.



முத்துநகரில் பிரசாரத்தில் இருந்த தங்கைக்கு போன் போட்டிருக்கார் சூரிய கட்சி அண்ணன். தென் மாவட்டங்களில் நாம் மட்டுமல்ல; கூட்டணி கட்சியினர் அனைவரும் வெற்றி பெற வேண்டும். முத்துநகரில் உன்னோட வெற்றி உறுதியாகிடுச்சு; அதுனால, தொகுதி பத்தி கவலைப்படாம, மற்ற தொகுதி வெற்றிக்கும் செய்ய வேண்டிய வேலைகளை நேரடியா சென்று பார் என உத்தரவிட்டிருக்கிறாராம்.

'முழுசும் பார்'


Sainathan Veeraraghavan - Ontario, கனடா
09-ஏப்-2024 13:24 Report Abuse
Sainathan Veeraraghavan நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்பது அண்ணா stalin அவர்களுக்கு தெரியாதா
Barakat Ali - Medan, இந்தோனேசியா
05-ஏப்-2024 11:45 Report Abuse
Barakat Ali தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெல்லவேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கே இல்லை ..... காரணம் திமுகவுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு .....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்