கெஜ்ரிவால் கேட்ட 3 புத்தகங்கள்: திகார் சிறையில் என்னென்ன சலுகைகள்?

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். "லோக்சபா தேர்தல் முடியும் வரையில் அவரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம்" என்கிறார், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா.

டில்லியில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதாக எழுந்த புகாரில், கடந்த மார்ச் 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 'சிறையில் இருந்தாலும் அவர் முதல்வராக தொடர்வார்' என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.

இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலை, ஏப்ரல் 15 வரையில் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, "அவர் குற்றம் செய்ததாக நீதிமன்றம் கூறவில்லை. அப்படியிருக்கும்போது அவரை ஏன் சிறையில் அடைக்க வேண்டும். லோக்சபா தேர்தல் முடியும் வரையில் அவரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம்" என்றார்.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, கெஜ்ரிவாலுக்கு திகார் சிறையில் தனி அறை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக் கட்டுப்பாட்டை மீறி முதல்வராக அவரால் செயல்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சிறையில் தனக்கு வேண்டிய வசதிகள் குறித்து கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில், பகவத் கீதை, ராமாயணம் மற்றும் பத்திரிகையாளர் நீரஜா சௌத்ரி எழுதிய How Prime minister decide ஆகிய 3 புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

மதம் சார்ந்து அணிந்திருக்கும் பொருள்களை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். சிறையில் மருந்துகளை தர வேண்டும், உடல்நலனுக்கு ஏற்ற சிறப்பு உணவுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

தற்போது திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு இரண்டாம் எண் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது அறைக்கு வெளியே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 வரையில் நீதிமன்றக் காவலில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளதால், டில்லியில் நிர்வாகரீதியான பணிகளை அவர் எப்படி மேற்கொள்ளப் போகிறார், தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தாமரை மலர்கிறது - தஞ்சை, இந்தியா
02-ஏப்-2024 19:58 Report Abuse
தாமரை மலர்கிறது பணம் சம்பாரிப்பது எப்படி? என்ற புத்தகத்தை தான் கெஜ்ரி விரும்பி படிப்பார்.
angbu ganesh - chennai, இந்தியா
02-ஏப்-2024 09:47 Report Abuse
angbu ganesh இடிக்கிறது கோயில படிக்கறது ராமாயணம்
Shekar - Mumbai, இந்தியா
02-ஏப்-2024 09:19 Report Abuse
Shekar பகவத் கீதை, ராமாயணம் கேட்டாரா?...சான்ஸே இல்லை அவர் இண்டி கூட்டணி தர்மப்படி மதசார்பற்ற பைபிளும் குரானும் அல்லவா கேட்டிருப்பார், மதம் சார்ந்த பகவத் கீதை, ராமாயணம் கேட்டிருக்கமாட்டாரே, இது ஒரு பொய் பிரச்சாரம்.
S Ramkumar - Tiruvarur, இந்தியா
02-ஏப்-2024 08:37 Report Abuse
S Ramkumar இது எல்லாமே முதல் வகுப்பு கைதிகளுக்கு கிடைக்கும். சில உணவு வகைகளை தவிர. புத்தகங்கள் கண்டிப்பாக அனுமதி உண்டு.. அரணா கயிறும் கஷ்டம்தான். இதை நீதிபதியிடம் கோரி உள்ளோம் என்று சொல்லுவதில் உள்ளர்த்தம் இருக்கு. பாருங்க எங்கள் தலைவர் இவ்வளவு கஷ்டத்தில் உள்ளார். நாங்கள் எல்லாமே நீதிமன்றத்தை நாடிதான் வாங்கினோம் என்று பிறகு உருட்டுவதற்கு வசதியாக இருக்குமல்லவா.
VENKATASUBRAMANIAN - bangalore, இந்தியா
02-ஏப்-2024 07:28 Report Abuse
VENKATASUBRAMANIAN படிப்பது ராமாயணம் ஆனால் இடிப்பது பெருமாள் கோவில்
Indhuindian - Chennai, இந்தியா
02-ஏப்-2024 05:55 Report Abuse
Indhuindian படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் அதுபோல படிப்பது தர்மம் சாஸ்த்ரா உபதேச பகவத் கீதை செய்வது வூசல் இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாள் அய்யா இன்னும் எத்தனை நாள் அய்யா
Jysenn - Perth, ஆஸ்திரேலியா
01-ஏப்-2024 22:03 Report Abuse
Jysenn ivan periya nadigar.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்