சர்வாதிகார நாடுகளில் தான் இப்படி நடக்கும்: ரூ.1,823 கோடி அபராதத்தால் காங்., கொதிப்பு

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ததில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட காரணங்களுக்காக 1,823 கோடி ரூபாயை அபராதமாக கட்டுமாறு. காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த வாரம், காங்கிரசின் நான்கு வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. மேலும், 2018-2019 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்த காரணத்தால் காங்கிரசுக்கு 210 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதற்கு காங்கிரஸ் தயாராகி வந்தது.

இந்நிலையில், '1,823 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும்' என வருமான வரித்துறையில் இருந்து வந்த நோட்டீஸ், காங்கிரஸ் நிர்வாகிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அதில், 2017-2018 நிதியாண்டு முதல் 2020-2021 வரையிலான காலகட்டத்தில் முறையாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யாததால், வட்டியுடன் கூடிய அபராதமாக 1,823 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரசின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்துப் பேட்டி அளித்த ராகுல் காந்தி, "தேர்தலுக்கு முன்னதாக, 2 பழைய நோட்டீஸ்கள் வருகின்றன. 14 லட்ச ரூபாய் வருமான வரி பிரச்னைக்காக, எங்களின் ஒட்டுமொத்த பொருளாதார அடையாளமும் பறிக்கப்படுகிறது.

காங்கிரசின் மீது பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிரிமினல் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற கருத்தியல் பொய்யாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 சதவீத வாக்குகள் உள்ள எங்களால் 2 ரூபாயைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு வங்கிக் கணக்கை முடக்கிவிட்டனர்.

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னைக்காக தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் வங்கிக் கணக்கை முடக்கியது என்பது திட்டமிட்ட செயல்" எனப் பேசியிருந்தார்.

தற்போது அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறித்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:

காங்கிரசை அழிப்பதற்கு நடக்கும் முயற்சி இது. தனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது சிறு சிறு பிழைகள் வரலாம். அதற்கு வரி அல்லது அபராதத்தை விதிப்பார்கள். சிறு பிழைகள் வந்துவிட்டன என்பதற்காக தனி நபர்களை அழிப்பது கிடையாது.

காங்கிரஸ் தாக்கல் செய்த கணக்கில், '14 லட்ச ரூபாய் சரியாக வரவில்லை' என முதல் நோட்டீஸை கொடுத்தார்கள். அது விஸ்வரூபம் எடுத்து, ஒவ்வொரு கணக்கிலும் பிழை தொடர்வதாக 30 ஆண்டுகாலத்தை கணக்கில் எடுத்துள்ளனர்.

30 ஆண்டுகால கணக்குகளுக்கு இவர்கள் 10 ஆயிரம், 20 ஆயிரம் கோடி ரூபாய்களைக் கூட அபராதமாக விதிப்பார்கள். இது பிற கட்சிகளுக்கும் ஓர் எச்சரிக்கை. இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் சர்வாதிகார நாடுகளில் தான் நடக்கும்.

நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். ஒவ்வொரு கட்சியாக இவர்கள் ஒழிப்பார்கள். இந்தியாவில் முதல்வரை கைது செய்ய அனுமதிக்கும்போது எதுவும் நடக்கும்.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
01-ஏப்-2024 06:10 Report Abuse
Kasimani Baskaran காங்கிரசுக்கு மட்டும் அரசு நிலங்கள் பல காரணம் சொல்லப்பட்டு ஓசியில் கொடுக்கப்பட்டன. அந்த சொத்துக்களின் விபரம் பலருக்கு தெரியாது. பல தனிப்பட்ட கணக்குகளில் நிர்வகிக்கப்பட்டு கண்ட மேனிக்கு செலவு செய்யப்பட்டது. பலர் லவட்டி அதில் இன்புற்றார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தபின் பல இடங்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஓட்டைகளை கண்டு பிடிக்க ஆரம்பித்தார்கள். இனி காங்கிரசுக்கு கெட்ட காலம்தான்.
S Ramkumar - Tiruvarur, இந்தியா
30-மார்-2024 08:19 Report Abuse
S Ramkumar நாட்டை ஆண்ட காங்கிரஸ். எப்ப வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவேண்டும் எவ்வளவு செய்யவேண்டும் என்று தெரியாதா. என்ன செய்வது. இது வரை கேட்ட்க ஆளில்லை. இப்ப. tribunalukku போங்க. அதுதான் வழி. கேட்டல் கூட இரண்டாயிரம் கோடி சும்மா தேறும். எதுக்கு இவ்வளவு அலப்பறை.
வாய்மையே வெல்லும் - மனாமா, பஹ்ரைன்
30-மார்-2024 08:14 Report Abuse
வாய்மையே வெல்லும் மல்லிகார்ஜுன கார்கே கிட்டயே இந்த பணம் சல்லீசா கிடைக்கும்.. வெளிநாடுகளில் வைத்துள்ள கணானவை திறந்து விடுங்க.. அது கொட்டோ கொட்டுன்னு கொட்டும். இங்க பஞ்சவேஷம் போட்டால் எவனும் உங்களை மதிக்கமாட்டார்
தாமரை மலர்கிறது - தஞ்சை, இந்தியா
29-மார்-2024 22:33 Report Abuse
தாமரை மலர்கிறது காங்கிரஸ் தேவை இல்லாத ஆணி. எழுபது ஆண்டுகளாக நாட்டை சீர்கெடுத்துவிட்டது. புடிங்கி போடுவதில் தவறில்லை.
R KUMAR - Oregon, யூ.எஸ்.ஏ
29-மார்-2024 21:23 Report Abuse
R KUMAR திரு ப. சிதம்பரம், இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர். இவரே இதுபோன்று கூறினால், இவர் வகித்த பதவியின் மாண்பை குறைத்து கேலிக்கூத்தாகிவிட்டார் என்று கருதவேண்டும். வருமான வரி செலுத்தவில்லையென்றாலோ காலதாமதமாக வருமான வரி கணக்கை அளித்தாலோ என்ன தண்டனை என்று இவருக்கு தெரியும்.
Dharmavaan - Chennai, இந்தியா
29-மார்-2024 17:35 Report Abuse
Dharmavaan கோர்ட் கூட ஏன் இதை தடுக்கவில்லை அப்படியானால் உண்மைதானே
Rengaraj - Madurai, இந்தியா
29-மார்-2024 17:34 Report Abuse
Rengaraj நேர்மையாக கணக்கு காட்ட வேண்டியதுதானே வரியை கட்டிவிட்டு பேசலாமே ? கட்சிகணக்கு , வருமானம் இவற்றைத்தானே கேட்கிறார்கள். ? அதற்கு எதற்கு இத்தனை தாமதம் ? இவர்கள் ஆட்சியில் தனிநபர் இப்படி தாக்கல் பண்ணவில்லையென்றால் சும்மா விட்டு வைப்பார்களா ? இப்படி குமுறுகிறார்கள் என்றால் இவர்கள் ஆட்சியில் எத்தனை நபர்களுக்கு இப்படி கேட்காமல் இருந்திருப்பார்கள் என்று சந்தேகம் வரத்தானே செய்யும் ? தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் கேட்க வருமான துறைக்கு உரிமை உள்ளதா இல்லையா ? இதில் என்ன பழிவாங்கல் ? ஒரு ருபாய் என்றாலும் கூட அரசாங்க பணம் அரசாங்கத்துக்கு கண்டிப்பாக வந்து சேர வேண்டும்.
Dharmavaan - Chennai, இந்தியா
29-மார்-2024 17:34 Report Abuse
Dharmavaan இவன் ராஜிவ் காந்தி டிரஸ்ட்க்கு சீனாவிடம் வாங்கிய லஞ்சத்துக்கு என்ன வரி.அவன்செய்துகொண்ட ஒப்பந்தம் ஏன் வெளிவரவில்லை
HoneyBee - Chittoir, இந்தியா
29-மார்-2024 17:19 Report Abuse
HoneyBee சட்டம் தன் கடமையை செய்தது...
m.n.balasubramani - TIRUPUR, இந்தியா
29-மார்-2024 16:39 Report Abuse
m.n.balasubramani உங்க ஆட்சிலயும் இந்த ஆட்சியிலும் எத்தனை வரி அபராதம் மக்கள் நாங்க கட்டி இருப்போம். மேல் முறையிடு செய், எதற்கு கூப்பாடு, மக்களை ஏமாற்ற நாடகம்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்