'கட்டுமரம் வேண்டாம்' தமிமுன் அன்சாரி பேட்டி

''கட்டுமரத்தை விட, போர்க்கப்பலில் பயணம் செய்தால் தான் கடல் கொள்ளையர்களை வீழ்த்த முடியும்,'' என, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன்அன்சாரி சந்தித்து தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தார்.

பின், நிருபர்களிடம் தமிமுன் அன்சாரி கூறியதாவது:

நாங்கள் அ.தி.மு.க., விற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, இண்டியா கூட்டணிக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறோம்.

இண்டியா கூட்டணியில், தமிழகத்தில் தி.மு.க., இருப்பதால், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். தேர்தல் நேரத்தில் முதன்மையான நோக்கம் ஜனநாயகத்தை காப்பது தான்.

கடல் கொள்ளையர்களை வீழ்த்த வேண்டும். அதற்காக, கட்டுமரத்தில் பயணம் செய்வதா, போர்க்கப்பலில் பயணம் செய்வதா என, யோசிக்க வேண்டும். போர்க்கப்பலில் பயணம் செய்தால் தான் கடல் கொள்ளையர்களை வீழ்த்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலினை ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், மக்கள் விடுதலை கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்