விஜய் கட்சியினர் ரகசிய 'சர்வே'

அரசியல் பயணத்தை துவக்க உள்ள நடிகர் விஜய் தன் பலத்தை தெரிந்து கொள்வதற்கு வசதியாக, அனைத்து தொகுதிகளிலும் சர்வே எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பிரபல நடிகர் விஜய், அரசியலில் குதிக்க முடிவு செய்து, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற தன் கட்சியின் பெயரை அறிவித்தார். 2026ல் சட்டசபைத் தேர்தல் தான் தன் இலக்கு என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தன் பலத்தை தெரிந்து கொள்வதற்காக, அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் ரகசிய சர்வே எடுக்க முடிவு செய்துள்ளார். முன்னோட்டமாக இடைத்தேர்தல் நடக்க உள்ள திருக்கோவிலுார் மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் சர்வே பணிகள் துவங்க உள்ளன.

ஒவ்வொரு தொகுதியிலும், விஜய் ரசிகர்கள் எத்தனை பேர், அவர்களில் ஆண்கள், பெண்கள் எத்தனை பேர், தேர்தலில் போட்டியிட்டால் எவ்வளவு ஓட்டு கிடைக்கும், தொகுதி வாரியாக உள்ள பிரச்னைகள், மக்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை இந்த சர்வேயில் இடம் பெறுகின்றன.

சர்வே முடிவுகளின் அடிப்படையில் தன் பலத்தை தெரிந்து கொண்டு அரசியல் வியூகங்களை வகுப்பதற்கு விஜய் திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்