கண்டுகொள்ளாத பா.ஜ., : அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம்

"அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றுள்ளது" என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஐ.யூ.எம்.எல்., கொ.ம.தே.க, இ.கம்யூ,. மார்க்சிஸ்ட் கம்யூ., ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி., ஆகிய கட்சிகளுடன் தி.மு.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கூட்டணியை வலுவாக்கும் முயற்சியில் அ.தி.மு.க., தலைமை ஈடுபட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ., புதிய பாரதம் ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியும், அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அ.தி.மு.க.,வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

சந்திப்புக்குப் பின், டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், "லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி என்பதில் புதிய தமிழகம் கட்சி உறுதியாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணி வலுவான அணியாக அமையும். எங்களின் விருப்பத்தை தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரிடம் தெரிவித்துள்ளோம். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. விரைவில் எந்த தொகுதியில் போட்டி என்பதை ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்வோம்" என்றார்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "புதிய தமிழகம் கட்சித் தலைவருடனான பேச்சுவார்த்தை குறித்து பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்போம். இந்தக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்" என்றார்.

கண்டுகொள்ளாத பா.ஜ.,



புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், "பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பது தான் கிருஷ்ணசாமியின் நோக்கமாக இருந்தது. ஆனால், பா.ஜ., தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம், அவருக்கு இருந்துள்ளது. பா.ஜ., அணியில் தென்காசி தொகுதி, இந்தமுறை கிடைக்குமா என்ற சந்தேகமும் இருந்துள்ளது.

அதற்கான எந்த சிக்னலும் பா.ஜ., தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தூது அனுப்பினார். அவரும், கிருஷ்ணசாமியின் கோரிக்கையை பஏற்றுக் கொண்டதால் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது" என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்