புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ!
நமது நிருபர்
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தினர். சாலையின் இருபுறமும் திரண்ட தொண்டர்கள் வாகனத்தில் மேல் ஏறியும், கூச்சலிட்டும் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியின் 16வது சட்டசபைக்கான தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ள தே.ஜ., கூட்டணி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்.,-16; பா.ஜ.,-10; அ.தி.மு.க., மற்றும் ல.ஜ.க., தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி இருந்தார். அந்தவகையில் இன்று (ஏப்ரல் 04) புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறமும் ஏராளமான பேர் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து திறந்த வேனில் இருந்தபடி கையத்து சென்றார் விஜய். அவரது வாகனத்தை பைக்கில் விரட்டிய ரசிகர்கள், தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
மேலும் பல இரு சக்கர வாகனங்களின் சாவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சாலையின் இருபுறமும் திரண்ட தொண்டர்கள் வாகனத்தில் மேல் ஏறியும், கூச்சலிட்டும் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.
ரீல்ஸ் பாருங்கள்!
வேனில் ஏறிய சிறுவன்; பதறிப்போன விஜய்.
விஜய்க்கு இளநீர் கொடுத்த தொண்டர்கள்
Advertisement
இந்த மனுஷன் வீட்டை விட்டு வெளியே வந்தால் இது தான் பிரச்சணை ரெண்டு நாள் முன்னாடி திருச்சி யில் ஒரு போலீசார் படு காயம் மற்றும் ஒரு பெண் படு காயம்
இந்த நடிகரும் அரசியல்வாதியுமானவர் 10/12 ஆம் வகுப்பை முடித்தாரா இல்லையா என்பதும், அவர்களின் இரண்டாம் நிலை/மாவட்ட அளவிலான தலைவர்களில் பெரும்பாலோர் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்களா இல்லையா என்பதும் எனக்குத் தெரியாது
இந்த வெறித்தனமான ஆதரவாளர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்: நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய எவருக்கும் இந்தத் தேர்தல் கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும். இனி அரசியலில் ஈடுபடவோ அல்லது இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காணவோ கூடாது என்பதற்கு இது அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
புதுச்சேரியை ஸ்தம்பித்தது , புது வரலாறு TVK இன்று படைத்தது ..

தலைவன் வண்டியில விழுந்து செத்தா நரகம் கிடையாது, நேரா சொர்கத்தில்தான் அட்மிஷன் அப்படின்னு அணில் குஞ்சுகளுக்கு யாரோ சொல்லி கொடுதிருப்பாங்களோ