Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 நட்சத்திர பேச்சாளர்; துரைமுருகனுக்கு 'கல்தா'

 நட்சத்திர பேச்சாளர்; துரைமுருகனுக்கு 'கல்தா'

சென்னை: தி.மு.க., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், பொதுச்செயலர் துரைமுருகன் பெயர் இல்லை.

அ.தி.மு.க.,வில் இருந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சமீபத்தில், தி.மு.க.,வில் சேர்ந்தார். இந்த தேர்தலில், தி.மு.க., சார்பில், போடி நாயக்கனுார் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தி.மு.க., சார்பில், அக்கட்சியின் நட் சத்திர பேச்சாளர்கள் பட்டி யல், தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, துணை பொதுச்செயலர் கனிமொழி, நடிகர்கள் வாகை சந்திரசேகர், போஸ் வெங்கட், இயக்குநர் அமீர் , அ.தி.மு.க.,வில் இருந்து வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், தி.மு.க., பொதுச்செயலரான துரைமுருகன் பெயர், அந்த பட்டியலில் இல்லை.

Advertisement

ஏப் 01, 2026 09:09 am

நக்கல் பிடிச்சவர்

Reply Rate this