Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 ரூ.1.10 லட்சம் பறிமுதல்

 ரூ.1.10 லட்சம் பறிமுதல்

நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட, ரூ.1.10 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நெய்வேலி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணி அளவில் நெய்வேலி நகர் பொதுக்கூடம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் உதவி செயற்பொறியாளர் தேன்மொழி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்த போது நெய்வேலி அடுத்த வடக்கு மேலுார் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் எவ்வித ஆவணமின்றி, ரூ.1.10 லட்சத்தை எடுத்துச்சென்றதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகவல்லியிடம், பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Advertisement