4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் பா.ம.க., ராமதாஸ்
சென்னை : சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி சேர்ந்து, சட்டசபை தேர்தலை சந்திக்கிறார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.
தன் தரப்பில் தேர்தலில் போட்டியிடும் 24 வேட்பாளர்களின் பட்டியலை, ஏற்கனவே மூன்று கட்டங்களாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
மேலும், உத்திரமேரூர் தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஸ்ரீதருக்கு பதிலாக, மாநில மகளிரணி செயலர் சரளா ராஜு போட்டியிடுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்