Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இந்த முறை கோவையில் எப்படி ஜெயிப்பீர்கள்? தி.மு.க. நேர்காணலில் கேள்வி மேல் கேள்வி

இந்த முறை கோவையில் எப்படி ஜெயிப்பீர்கள்? தி.மு.க. நேர்காணலில் கேள்வி மேல் கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவை: கோவை தெற்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க, நேர்காணலில் தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம், சென்னையில் தி.மு.க. தலைவரான முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான நேர்காணல் நேற்று நடந்தது.
அதில் பங்கேற்ற தி.மு.க. வினர் கூறியதாவது: ஒருவர் இரண்டு, மூன்று தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ஒரு தொகுதிக்கான நேர்காணலில் மட்டுமே பங்கேற்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. தெற்கு தொகுதிக்கு 35 பேர் பங்கேற்றனர். இத்தனை பேர் வந்திருக்கிறீர்களே; ஒருவருக்கு தானே சீட் தர முடியுமென கேட்டார்.

கடந்த தேர்தலில் மூன்றாமிடத்துக்கு சென்றது ஏன் என கேட்டார். காங்கிரஸ் போட்டியிட்டது; அவர்கள் வேலை செய்யவில்லை. இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் தோற்று விட்டனர். அதற்கு முன் இரண்டு முறை தி.மு.க. வென்றது. அதனால், தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என கூறினோம்.

காங்கிரசுக்கு 28 தொகுதி கொடுத்திருக்கிறோம்; அவர்களும் கேட்பார்களே என அவர் கூறியதற்கு, கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக தோற்று விட்டனர். நம் கட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள்; தி.மு.க. போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
தெற்கு தொகுதியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வலியுறுத்தினோம். அதற்கு, 'உங்களை தவிர வேறு யாரை நிறுத்தினாலும், இணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார்.
சிங்காநல்லுார் தொகுதிக்கான நேர்காணலில், 22 பேர் பங்கேற்றனர். கடந்த தேர்தலில் 7 சதவீதம் ஓட்டு குறைந்தது ஏன் என கேட்டார். கடந்த முறை போட்டியிட்டு தோற்றது யாரென கேட்டார். முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திக் எழுந்து நின்றார். அவரை அமரச் சொன்னார்.
இந்த முறை எப்படி ஜெயிப்பீர்கள் என கேட்டதற்கு, ஒவ்வொரு நிர்வாகியும் ஆளுக்கொளு விளக்கம் கூறினர். இதேபோல், மற்ற தொகுதியிலும் நேர்காணல் நடத்தப்பட்டது. இவ்வாறு, தி.மு.க. வினர் கூறினர்.

Advertisement

மார் 21, 2026 01:26 pm

கள்ள ஓட்டு போட்டுதான்

Reply Rate this
மார் 21, 2026 10:49 am

முதலில் கண்ணாடி முன் நின்று நான் எப்படி ஜெயிக்கபோகிறேன் என கேட்டுக்கொள்ளுங்கள்.

Reply Rate this

எல்லாம் ஓட்டுக்குக் காசு குடுத்து தான்.

Reply Rate this
மார் 21, 2026 09:28 am

அசடு கேக்கும் அசட்டு கேள்வி

Reply Rate this
மார் 21, 2026 07:45 am

இதென்ன மடத்தனம்...? என்ன புதுசா சொல்ல போறாங்க? வழக்கம் போல 1) எய்ம்ஸ் செங்கல், 2) ஹிந்தி மற்றும் ஹிந்து எதிர்ப்பு, 3) சனாதன, 4) சமஸ்கிருத எதிர்ப்பு 5) நீட் ஒழிப்பு முதல் கையெழுத்து, 6) மாதா மாதம் மின் கட்டணம் வசூல் 7) ஈர வெங்காயம், 8) 21 ஆம் பக்கம் 9) தமிழ்நாடு டெல்லிக்கு எப்போதும் அவுட் ஆஃப் control அப்டின்னு உருட்டல். 60 வருஷமா இதே புளித்து போன விஷயங்கள் தானே?

Reply Rate this
போலி ஐடி போல தெரிகிறது.
மார் 21, 2026 08:57 am
Rate this
மார் 21, 2026 07:12 am

ஈரான் போல சுரங்கம் தோண்டி அங்கு வாக்காளர்களை அடைத்து வைத்து ஜெயிப்போம்...

அதன் பின்னர் மாணவர்களை மீட்க ஈரானுக்கு பஸ் விட்டது போல கேஸ் கொண்டுவர டேங்கர் லாரி கூட அனுப்புவோம். ஈரான் மத்தியப்பிரதேசத்துக்கு பக்கத்தில் இருப்பதாக நினைக்கும் தமிழனுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சினையே அல்ல.


ஓட்டு வாங்குவதில் பிரச்சினை இல்லை என்பதால் அடுத்த ஆட்சியில் சிறப்பாக ஆண்டதற்கு சிலை வைக்க திட்டமிடுவதில் கவனம் செலுத்தப்படும்.

Reply Rate this
மார் 21, 2026 06:54 am

சிம்பிள் ..காசு கொடுத்து தான்

Reply Rate this
மார் 21, 2026 06:53 am

Simple.....காசு கொடுத்து தான்

Reply Rate this