ஹிந்தி, 'நீட்' எதிர்ப்பு: கைவிட்டது தி.மு.க.,
பி ரச்சார வீடியோவில் ஹிந்தி எதிர்ப்பு, 'நீட்' எதிர்ப்பை தி.மு.க., கைவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக, 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற பிரச்சார பாடலை, கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க., வெளியிட்டது.
இந்நிலையில், அந்த பாடலை புதுப்பொலிவுடன், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்டார். அதில் ஹிந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு பற்றி எந்த வரியும் இடம் பெறவில்லை. இது, தி.மு.க., தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., தரப்பில் கேட்டபோது, 'பழைய வீடியோவில் ஹிந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு பற்றிய பாடல் வரிகள் இருந்தன. இன்றைய நிலையில் அவை எடுபடாது; மேலும் ஓட்டுகள் குறையவும் வாய்ப்புள்ளது. அதனால் அவற்றை நீக்கி, புதுப்பொலிவுடன் பாடல் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.
Advertisement
மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பது மட்டுமே திமுகவினர் மாற்றாத ஒரே கொள்கை. அவர்கள் சுருட்டி ஏப்பம் விடுவதற்கு எந்த கொள்கை எப்போது தேவையோ அது அப்போது.
இந்தமுறை திமுக கூட முழுமனதாக களத்தில் இல்லை. கடந்த ஐந்தாண்டுகளாக ஏராளமாக அடித்து விட்டார்கள். மத்திய கிழக்கில் போர் வேறு நடக்கிறது. லூலூ போல இந்தியாவுக்கு வந்து சேராத செல்வங்கள் அடிவாங்கும் என்ற பயம் வந்துவிட்டது.
நீட் ஆரம்பித்து 6 batch மாணவர்கள், இன்று படிப்பையே முடிக்கப்போகிறார்கள் அந்தப் பருப்பு இங்கு வேகவில்லை ஹிந்தி எதிர்ப்பெல்லாம் 1965 வோடு முடிந்துவிட்டது செத்த பாம்பை, அது அடக்கமும் செய்தபின் எதை அடிப்பது? மக்கள் என்றோ விழித்துக்கொண்டு விட்டார்கள்
இத்தனை நாள் மக்களை முட்டாளாக நினைத்தது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்
அது ஒன்னும் இல்லை பாஸ். நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் சென்றால், ......... on constitution ல் எதிர்கொள்வோம் என முக்கிய காங்கிரெஸ் தலைவரின் மனைவி கூறினார். அவரது மகனும், இது முடிந்து போன சமாச்சாரம் என்றார். ஹிந்தியை பொறுத்தவரை, தமிழக முதல்வர் முதல், திராவிட தொண்டர்கள் / அடிபிடிகள் வரை நடத்தும் பள்ளிகள் மற்றும் வாரிசுகள் ஹிந்தி கற்கின்றனர். எப்படி எதிர்க்க முடியும் ?? அவர்கள் பட்டியல் வெளியானால், கதை முடிந்தது. இவ்வளவு தான் விஷயம். பின்னர், மேற்கண்ட விஷயங்களில் ஜகா வாங்கித்தான் ஆக வேண்டும். அப்புறம் எதுக்குய்யா வீராப்பு, வெட்டி வேஷம், அறைகூவல் எல்லாம் ?? அதான் சாயம் முற்றிலும் வெளுத்துப்போச்சே.

பராசக்தி படத்தோல்வி எபக்ட் . அதைவிட காமெடி திமுக தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகளே நீட் தேர்வு எழுதுவது.