Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இபிஎஸ் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

 இபிஎஸ் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்கிறாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்கிறாரா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை: தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்.

இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, ஹிந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பாஜ தலைமையிலான தேஜ அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

ஏற்க முடியாது!

“மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும். தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய ஹிந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை. இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது? ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா?
இது குறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பையும், பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது. இந்த முரண் வெளிப்படையானது, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத தொடர்ச்சியாகப் போதிய தமிழாசிரியர்களை நியமிக்கத் தவறிய இதே மத்திய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைக்கிறது.

நாடகத்தின் உச்சம்

இது பொறுப்புணர்வல்ல; கபட நாடகத்தின் உச்சம். ஆசிரியர்களின் எண்ணிக்கை, போதிய பயிற்சிக்கான திறன் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை குறித்த உண்மைக் களநிலவரத்தை மத்திய அரசு உணர்ந்திருக்கிறதா? இந்தச் செயல்திட்டத்தை அமல்படுத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள்?

கல்வித் துறையில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் இந்த நகர்வுக்கான நிதி ஆதாரம் எங்குள்ளது? எவ்விதத் திட்டமிடலும், வளங்களும், பொறுப்பும் இல்லாத உள்நோக்கம் கொண்ட மற்றுமோர் திட்டமாகவே இது தோன்றுகிறது. இது மொழி குறித்த கேள்வி மட்டுமல்ல; நியாயம், கூட்டாட்சி மற்றும் சமவாய்ப்புகள் குறித்த கேள்விகளுமாகும்.

முன்னேற்றம்

ஹிந்தி பேசும் மாணவர்களைக் கட்டமைப்புரீதியான சலுகைகளை அளித்து, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே மேலும் ஏற்றத்தாழ்வுகளையே இது உண்டாக்கும்.
முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முன்னோக்கி நகரும் வேளையில், நம் குழந்தைகள் எதிர்காலத்திற்காகத் தயாராக இருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், விஷுவல் எபக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் அவர்களது திறனை மேம்படுத்தி, அவர்களது அறிவியல் பார்வையையும் திறனாய்வுச் சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும். மாறாக, இத்தகைய பிற்போக்குத்தனமான, இறுக்கமான மொழிச் சுமை அவர்களது முன்னேற்றத்தைத் தடுப்பதாக உள்ளது.

ஆபத்தானது

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய நியாயமான, ஜனநாயகப்பூர்வமான கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஹிந்தியைத் திணிப்பதில் மத்திய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது. இந்தச் செயல், கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கு எதிரானது, கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி அடையாளங்களை நேரடியாக அவமதிக்கும் செயல். இந்தியாவின் வலிமை என்பது, பன்முகத்தன்மையில்தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை.
இந்தச் சமநிலையைக் குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானதுமாகும். நம் நாட்டின் அடிப்படையான பன்மைத்துவத்தையே தாக்கும் இத்தகைய கொள்கைகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிவையாகும். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவும், அதன் தேஜ கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனரா? அல்லது நமது மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்களா?
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

ஈர வெங்காய மாடலின் சிறப்பம்சமே இந்திய மொழியை எதிர்ப்பது, அன்னிய மொழிக்கு காவடி தூக்குவது...உலகிற்கே சுதந்திரம் குடுத்தாலும் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என அடிமை சாசனம் எழுதி குடுத்த மாடல்

Reply Rate this
ஏப் 04, 2026 06:49 pm

இன்னும் இந்த ஊசி போன வடையை எதற்கு எங்கள் மேல் திணிக்கிறீர்கள் புலிகேசி சார்.. உங்கள் கட்சி, குடும்பம் நடத்தும் பள்ளிகளில் இந்த ஊசி போன வடையை ஏன் திணிப்பதில்லை..

Reply Rate this
ஏப் 04, 2026 06:20 pm

உங்களை போல் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் கல்லுரிகளோ கல்வி நிலையங்களோ பழனிக்கு இல்லை. அதனால் எதிர்க்க வேண்டிய காரணமில்லை.

Reply Rate this
ஏப் 04, 2026 05:40 pm

மொழிப் பிரச்சனை காலாவதியாகிவிட்டது பல மொழி கற்கும் காலம் இது இப்போதைய காலகட்டத்திற்கு வாருங்கள் முதல்வரே

Reply Rate this
ஏப் 04, 2026 04:36 pm

உங்களுக்கென்னங்க நன்றாக சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள் பேரன லண்டன்ல படிக்க வைப்பீங்க ஏழை பிள்ளைகள் மூன்று மொழி தமிழ்நாட்டில் கத்துக்க முடியல. மூன்றாவது மொழி இஸ்டம் போல் தேர்ந்தெடுக்கலாம். உடனே ஹிந்தி திணிப்பு ஐந்தரை இலட்சம் கோடி கடன் வாங்கியாச்சு திருப்பி இவர்கள் வந்தால் தமிழ்நாட்டு நிலை என்ன ஆகப்போகிறதோ

Reply Rate this

ஹிந்தி திணிப்பை கேட்குற வாயி சில அரபி பள்ளிகளில் அரேபிய மொழி திணிப்பு அதே பள்ளியில் தமிழ் தடை /அழிப்பு பற்றி கேட்க தகிரியம் இருக்கா முன்னாள் முதலமைச்சரே ?? ஆ ஊன்னா தேஞ்ச ரெக்கார்டு ஹிந்தி திணிப்பு பற்றி காலம் காலமாகி உருட்டு

Reply Rate this
ஏப் 04, 2026 02:54 pm

திராவிட மாடல் வாய்கொழுப்பிற்கு உதாரணம் கீழே உள்ள பதிவு , சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சின்ன குத்தூசி கெட்டான் , பெண்கள் சளைத்தவர்கள் இல்லை உடன்பிறப்பே

Reply Rate this
ஏப் 04, 2026 02:40 pm

தெலுங்க வளர்க்க பாருங்க

Reply Rate this
ஏப் 04, 2026 01:10 pm

இதையே சொல்லி இன்னும் எவ்ளோ நாளைக்கு ஓட்டுவீங்க

Reply Rate this
மேல் படிப்புக்கு உதவாத ஹிந்தியை ஏன் ஐந்து வருடங்கள் படிக்க வேண்டும் எழுத படிக்க தெரிந்தாலே போதுமே.
ஏப் 04, 2026 03:39 pm
Rate this
ஏப் 04, 2026 12:55 pm

இதே கெட்டு போன வடையை எத்தனை முறைதான் சாப்பிடுவீக சுடலை.

மாற்றி யோசிங்க.

Reply Rate this