Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


5 தொகுதிக்கு அலையும் திமுக கூட்டணிக் கட்சிகள்: இபிஎஸ் கிண்டல்

5 தொகுதிக்கு அலையும் திமுக கூட்டணிக் கட்சிகள்: இபிஎஸ் கிண்டல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: '' நாங்கள் டில்லி சென்றால் அவதூறு பரப்புவது முதல்வர் ஸ்டாலின் வாடிக்கை. அவருக்கு பயம் வந்துவிட்டது,'' என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறினார்.
பாஜ, அமமுக, பாமக உடன் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு இபிஎஸ் கூறியதாவது: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. இன்னும் பல கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்று இரவுக்குள் சுமூகமாக பேச்சுவார்த்தை முடிந்து எத்தனை தொகுதி அறிவிக்கப்படும். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எங்கள் கூட்டணியை பற்றி விமர்சனம் செய்கின்றனர். தேஜ கூட்டணி உணர்வுப்பூர்வமாக அமைக்கப்பட்ட கூட்டணி. வெற்றி கூட்டணி.

வாடிக்கை

210 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறும். அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நாங்கள் டில்லிக்கு சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வரின் வாடிக்கை.ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அவ்வப்போது கருத்து பரிமாறுவதற்காக டில்லி செல்கிறோம். ஆனால், தோல்வி பயம் காரணமாக நாங்கள் டில்லி சென்றால் பயப்படுகிறார். அச்சப்படுகிறார்.

டில்லி சென்று சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறோம். எங்கள் கூட்டணி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி என அறிவித்துள்ளோம். மற்ற கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. இன்று இரவுக்குள் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வார்த்தைப் போர்

அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டி விரைவில் அறிவிக்கப்படும். 20 நாளாக திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கிறது அவர்களிடம் யாரும் கேட்கவில்லை. காலையில் தான் தலைவர்கள் வந்தனர். மதியம் முடிவு செய்தோம். மாலை அறிவித்து விட்டோம். 20 நாட்கள் காங்கிரஸ் -திமுக இடையே வார்த்தைபோர் நடந்தது. எந்த ஊடகமும் இது குறித்து விவாதிக்கவில்லை.

எங்கள் கூட்டணியின் நோக்கம் மக்கள் விரோத திமுக அகற்றப்பட வேண்டும். அதற்காக செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். திமுகவில் இழுபறி இடையில் தான் கூட்டணி அமைத்துள்ளனர். மார்க்சிஸ்ட், விசிகவுக்கு இன்னும் இறுதியாகவில்லை.கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் வாங்கினர். இந்த தேர்தலில் 5 தொகுதிகளுக்கு அலையோ அலை என்று அலைகின்றனர்.
@twitter@https://x.com/dinamalarweb/status/2036032995463979479 @@twitter@@

இயல்பு

கனிமொழி ஏன் டில்லி சென்றார். எதற்காக காங்கிரஸ் தலைவரை சந்தித்தனர். சந்தித்த பிறகு ஏதேனும் முடிந்ததா ?கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆலோசனை நடத்துவது இயல்பு. திமுகவில் எப்படி இழுபறி நீடிக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 23, 2026 10:24 pm

கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 44.9 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் என தெரிவித்திருந்தனர். அது போல் அதிமுக 38.5 சதவீதம் வாக்குகளை பெறும்.

Reply Rate this
மார் 23, 2026 10:19 pm

ANSகருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 44.9 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் என தெரிவித்திருந்தனர். அது போல் அதிமுக 38.5 சதவீதம் வாக்குகளை பெறும்.கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 44.9 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் என தெரிவித்திருந்தனர். அது போல் அதிமுக 38.5 சதவீதம் வாக்குகளை பெறும்.

Reply Rate this
மார் 23, 2026 05:54 pm

ஒழுங்க்கா தேர்தலில் ஒற்றுமைய்ய வேலை செய்து வெற்றி பெறட்டும். பிறகு பார்ப்போம். கொஞ்ச நாட்களில் தேர்தல் வேலையயை செய்யரேன் பேர்வழி என்று கடப்பாரை மண்வெட்டியுடன் குழி தோண்ட கிளம்பிட போறங்க. பார்ப்போம் என்ன நடக்குதுனு..

Reply Rate this
மார் 23, 2026 05:41 pm

அங்கே ஜந்து ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது இங்கே
பூஜ்ஜியம் பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது

Reply Rate this
இன்னும் எத்தனை காலம் திமுக தயவில் கூட்டனி கட்சிகள் ஒடுங்கி இருக்க போகின்றன?
மார் 23, 2026 06:25 pm
Rate this
வேல் முருகன் எதற்கு தலை தெறிக்க ஓடினார்? பூஜ்ய வாய்ப்பு ஏற்படும் என்றுதானே?
மார் 23, 2026 06:34 pm
Rate this
மார் 23, 2026 05:25 pm

அடிமைசாமி

Reply Rate this
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். அடிமை சாமிங்குறவன் கண்ணு அரண்டு போய் இருக்கு. பாவம்.
மார் 23, 2026 06:53 pm
Rate this
மார் 23, 2026 05:23 pm

எடப்பாடி சொல்வது சரி கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகாவுடன் கூட்டணி வைத்து இருந்தால்
பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் இந்த முறை பிஜேபி தமிழகத்தில் காலூன்ற கூடாது என்று
காரணம் சொல்லி தீயமூக கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்து இருக்கும் ....

Reply Rate this
மார் 23, 2026 04:55 pm

அதிமுகாவை பிஜேபி விழுங்கிவிட்டது என்கிறார் முதல்வர். திமுகாவை அதிமுக தான் விழுங்கிவிட்டது முதல்வரை சுற்றியுள்ள பவர்புள் அமைச்சர்கள் என பார்த்தல் அமரர் MGR மற்றும் ஜெயலலிதா கண்டெடுத்தவர்கள்தான், கருணாநிதி கண்டெடுத்தவர்கள் அமைச்சரவையில் ஒரு சிலர் மட்டுமே. திமுகாவே நாளை ஒரு முன்னாள் அதிமுக அமைச்சரிடம் தான் சரணடையும். இவர்களில் யாரேனும் ஒருவர் திமுக தலைவராகவும் பொது செயலாளராகவும் வர வாய்ப்புள்ளது

Reply Rate this
மார் 23, 2026 04:41 pm

எடப்பாடி அப்படித்து விட்டார்

Reply Rate this
உன் திராவிட மாடலிடம் சொல்லி முதலில் தமிழை ஒழுங்காக கற்றுக் கொள். அது என்ன அப்படித்து?
மார் 23, 2026 06:37 pm
Rate this
மார் 23, 2026 04:26 pm

இங்கே ஒண்ணு 12 குக்கருக்கு அலைவது தெரியுதே..

Reply Rate this
அப்பாவிக்கு டாஸ்மாக் போதும்
மார் 23, 2026 04:59 pm
Rate this