Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வேட்பாளர் தேர்வு: பா.ஜ.,வில் இழுபறி

வேட்பாளர் தேர்வு: பா.ஜ.,வில் இழுபறி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -

தமிழகத்தில், பா.ஜ., போட்டியிடும் தொகுதி களுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு, நடந்து வருகிறது.

மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலை மையில் , ஏழு பேர் இப்பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர் தேர்வு தொடர்பாக, தேசிய அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ், சென்னையில் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேசிய தலைமைக்கு அனுப்பப்பட்டது. அதில், கட்சி பணியில் முழுவீச்சில் ஈடுபட்டவர்களில், சிலர் பெயர் விடுபட்டுள்ளது.

இதையடுத்து, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள மூன்று பேரை தேர்வு செய்து, மீண்டும் புதிய பட்டியலை அனுப்ப, தமிழக பா.ஜ., தலைமைக்கு, அக்கட்சி தேசிய தலைமை உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, நேற்று புதிய பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழக பா.ஜ.,வில், 12 ஆண்டுகளாக அமைப்பு செயலராக இருந்த கேசவ விநாயகனுக்கு மாவட்டம், தொகுதி தோறும் உள்ள நிலவரம் தெரியும்.

அவரே விபரங்களை சேகரித்து விடுவார். அவர், பதவியில் இல்லாத நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாத ஏழு பேர் குழு அவ்வாறு செய்யவில்லை. அவர்களுக்கு வேண்டியவர்கள் பெயரை குறிப்பிட்டு பட்டியலை அனுப்பினர்.

இதில் வெற்றி வாய்ப்புள்ள சிலர் விடுபட்டிருப்பதாக, தேசிய தலைமை கருதியது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகளிடம் அவசரமாக தகவல் பெற்று, புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, நேற்று அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மார் 28, 2026 09:07 am

அண்ணாச்சிக்கே அஞ்சு தொகுதி பார்சலாயிட்டாமே..

Reply Rate this
மார் 28, 2026 05:45 am

தமிழக காங்கிரஸ் போல தமிழக பாஜகவும் கட்சி உட்பூசலில் ஈடுபட்டு உரு தெரியாமல் காணந்து போகப் போகிறது.

Reply Rate this