Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்; அன்புமணி தரப்புக்கு எதிராக 3 பேர் போட்டி

5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ராமதாஸ்; அன்புமணி தரப்புக்கு எதிராக 3 பேர் போட்டி

சென்னை: ராமதாஸ் தரப்பு பாமகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ,இந்த பட்டியலை ராமதாஸ் வெளியிட்டு உள்ளார். அதில் 3 பேர் அன்புமணி தரப்புக்கு எதிராக களம் இறக்கி உள்ளார்.
அதன்படி, சேலம் மேற்கு தொகுதியில் எம்எல்ஏ அருள், மயிலாடுதுறையில் சக்திவேல், வந்தவாசி தொகுதியில் முரளி சங்கர், கும்பகோணம் தொகுதியில் குடந்தை ம.க. ஸ்டாலின், விருத்தாசலம் இ.கே. சுரேஷ் ஆகிபோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அன்புமணி தரப்பு வேட்பாளர்களுக்கு எதிராக 3 பேர் களத்தில் உள்ளனர். சேலம் மேற்கு மு. கார்த்திக்கு எதிராக அருளும், விருத்தாசலம் வேட்பாளர் தமிழரசி ஆதிமூலத்துக்கு எதிராக சுரேசும் களம் காண்கின்றனர்.
மயிலாடுதுறை தொகுதியில் அன்புமணி தரப்பு வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமிக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் சக்திவேல் களத்தில் உள்ளார்.

Advertisement