திமுக வேட்பாளர் தகுதி நீக்கம்: அதிமுக கோரிக்கை

சென்னை: சென்னையில், தேர்தல் ஆணையர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சுதந்திரமாக, நேர்மையாக, நியாயமாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. தேர்தலை தலைவர்களின் ஆசி, மக்களின் ஆதரவு, ஜெயலலிதா திட்டங்களை வைத்து சந்திக்க உள்ளோம். ஆனால், திமுக, கொள்ளைபுற வழியாக, ஒட்டுகளை பெற பணத்தை பயன்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்கிறது. வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் துரைமுருகனுக்கு சொந்தமானது என நிருபணம் ஆனால், திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)