வி.சி., பிரமுகர்கள் காரில் ரூ.2 கோடி பறிமுதல்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே பேரளி டோல்வே பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையிலான காவல்துறையை சேர்ந்த குழுவினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வாகனம் ஒன்றில், பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இரவு 10 மணியளவில் திருச்சியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பணம் ஏதும் சிக்கவில்லை.
இதையடுத்து அந்த வாகனத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் வாகனத்தை சோதனையிட்டதில், வாகனத்தில் பல்வேறு பகுதியில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 2 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகி தங்கதுரை மற்றும் 2பேர் இந்த பணத்தை திருச்சியிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டு பின்னர் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதும், பணம் பிடிக்கப்பட்ட இடம் சிதம்பரம் தொகுதியை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)