ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மோசடி? சிவசேனா எம்.பி.,க்கு, 'நோட்டீஸ்'

மும்பை:''மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தாவது, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கன்னையா குமாரை தோற்கடிக்க வேண்டும்,'' என பேசிய, சிவசேனா, எம்.பி., சஞ்சய் ரவுத்துக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் ரவுத். இவர், அக்கட்சி பத்திரிகையான 'சாம்னா'வின் ஆசிரியராக உள்ளார். அதில், சஞ்சய் ரவுட் சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக, பீஹாரின் பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார்.அவர் விஷம் போன்றவர். அப்படிப்பட்டர் பார்லிமென்ட் உள்ளே நுழைவதை, நாம் அனுமதிக்க கூடாது. அவரை தோற்கடிக்க வேண்டும். அதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், மோசடி செய்தாலும் பரவாயில்லை. இவ்வாறு, அதில் அவர் எழுதியுள்ளார்.


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் இந்த சர்ச்சை கருத்து குறித்து, உடனடியாக விளக்கம் அளிக்கும்படி, சஞ்சய் ரவுத்துக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.கவர்னர் மீது புகார்உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான கல்யாண் சிங், தற்போது ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார்.


இவர், சமீபத்தில் பேசும்போது, 'நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என்றார்.'ஒரு மாநிலத்தின் கவர்னராக பதவி வகிப்பவர், இப்படிப்பட்ட கருத்தை தெரிவிப்பது, தேர்தல் நடத்தை விதி மீறலாகும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, தேர்தல் ஆணையம் புகார் கடிதம் அனுப்பி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)