மதுரையில் சவுராஷ்டிரா ஓட்டுகள் யாருக்கு?

மதுரை லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், ராஜ் சத்யன் போட்டியிடுகிறார். தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், எழுத்தாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில், 1.50 லட்சம், சவுராஷ்டிரா இனத்தவர் ஓட்டுகள் உள்ளன. இந்த ஓட்டுகளை பெற, இரு கட்சி யினரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சரவணன், சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர். அவர், தன் சமுதாய ஓட்டுகளை, அப்படியே, அ.தி.மு.க.,விற்கு பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே கூறிய பல வாக்குறுதிகளை, அவர் நிறைவேற்றவில்லை என்ற வருத்தம், சவுராஷ்டிரா சமுதாய மக்களிடம் உள்ளது.இதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த, தி.மு.க., கூட்டணி முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளரின் மனைவி, சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர். அவர் வாயிலாக, சவுராஷ்டிரா சமுதாய ஓட்டுகளை, தங்கள் பக்கம் கொண்டு வரும் பணியில், தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் இம்முறை, சவுராஷ்டிரா சமுதாய மக்கள் ஓட்டு, எந்த கட்சிக்கு செல்லும் என்ற, எதிர்பார்ப்புஏற்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)