'இது நம்ம வீட்டு கல்யாணம்'; அ.தி.மு.க.,வுக்கு, பா.ம.க., பாடம்

நம்ம வீட்டு கல்யாணம்னு நினைச்சு, தேர்தல் செலவுகள பார்த்து பண்ணச் சொல்லுங்கப்பா' என, ஆளும் கட்சியினரை அறிவுறுத்துமாறு, அ.தி.மு.க., தலைமையிடம், பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்றுள்ளது. அக்கட்சி, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம், தர்மபுரி, திண்டுக்கல், கடலுார், விழுப்புரம் ஆகிய, ஏழு தொகுதிகளில் போட்டியிடுகிறது. லோக்சபா தேர்தலை விட, 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் வெற்றி தான், தங்களுக்கு முக்கியம் என, அ.தி.மு.க., கருதுகிறது. அந்த தொகுதிகளில், பா.ம.க.,வின், ஓட்டு வங்கி கணிசமாக உள்ளது. இதனால், பா.ஜ., - தே.மு.தி.க., - த.மா.கா., - புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கூட்டணியில் இருந்தாலும், பா.ம.க., தலைவர்களுக்கு தான், அ.தி.மு.க.,வினர், அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

பா.ம.க., போட்டியிடும், அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க.,வின், உதயசூரியன் சின்னத்தை, நேரடியாக எதிர்கொள்கிறது. தங்களுடன் கூட்டணி பேச்சு நடத்திய நிலையில், திடீரென, அ.தி.மு.க., பக்கம் சாய்ந்த, பா.ம.க.,வை வீழ்த்துமாறு, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதை முறியடித்து, தங்கள் பலத்தை நிரூபிக்க, பா.ம.க.,வினரும், தேர்தல் செலவுகளில், 'தாராளம்' காட்டி வருகின்றனர். தொகுதி கைவிட்டு போன அதிருப்தியில் உள்ள, அ.தி.மு.க., நிர்வாகிகள், பா.ம.க., வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை, தங்களின் மேற்பார்வையில் செய்யுமாறும்,அதிக தொகையும் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த விபரம், வேட்பாளர்கள் தரப்பில் இருந்து, பா.ம.க., தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, 'இந்த தேர்தல், நம் அணிக்கு மிகவும் முக்கியம்; தேர்தலில் வென்றால், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலிலும், நம் கூட்டணி வெற்றி பெறும். 'இதனால், பா.ம.க.,வினரை, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என்று பார்க்காமல், இது, நம்ம வீட்டு கல்யாணம்னு நினைச்சு, ஒரு ரூபாயை கூட, பார்த்து பார்த்து செலவு பண்ண சொல்லவும்' என, கட்சியினரை அறிவுறுத்துமாறு, அ.தி.மு.க., தலைமையிடம், பா.ம.க., கூறியுள்ளது.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)