சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமாவளவன் தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், வி.சி., கட்சி வேட்பாளர், திருமாவளவன் சாமி தரிசனம் செய்து, பொதுதீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டினார்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும், வி.சி., வேட்பாளர் திருமாவளவன் நேற்று முன்தினம் காலை, நடராஜர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் வரவேற்றனர். பின், பொது தீட்சிதர்கள் அலுவலகத்திற்கு சென்று திருமாவளவன் ஆதரவு திரட்டினார்.

அப்போது திருமாவளவன் கூறியதாவது:தேர்தல் நேரம் என்பதால் உரிய போலீஸ் பாதுகாப்பு கேட்டு, நீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் வீடுகளில், மோடி தலைமையிலான மத்திய அரசு சோதனை நடத்துவது, அதிர்ச்சி அளிக்கிறது. இது, மிகவும் கண்டனத்துக்குரியது.காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் என்பது, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படும் திட்டம். ஆனால், அப்போதெல்லாம் எதுவும் செய்யாமல், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அது பற்றி, முதல்வர், இ.பி.எஸ்., பேசுகிறார். ஓட்டு வங்கியை குறி வைத்து இதை முதல்வர் பேசிவருகிறார்.இவ்வாறு, அவர்பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)