'நோட்டா'வுக்கு ஓட்டு : விவசாயிகள் திடீர் முடிவு

சாம்பல்பூர்: 'லோக்சபா தேர்தலில், ஒடிசா மாநில விவசாயி கள், தங்களது ஓட்டுகளை, 'நோட்டா'வுக்கு போட வேண்டும்' என, அம்மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான, பி.ஓ.கே.எஸ்.எஸ்.எஸ்., எனப்படும், 'பஸ்சிம் ஒடிசா க்ருஷக் சங்கதன் சமன்வாயா சமிதி' வலியுறுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில், முதல்வர், நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. போராட்டம்இங்கு, 'விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.தற்போது, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், விவசாயிகள் தங்கள் ஓட்டுகளை, 'யாருக்கும் ஓட்டளிக்கவில்லை' என்பதை குறிக்கும் வகையில், நோட்டாவுக்கு போட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.இது குறித்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.55 லட்சம்இந்த தேர்தலில், பா.ஜ., - காங்., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட, எந்த கட்சிக்கும் விவசாயிகள் ஓட்டு போடக் கூடாது. நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டும். இது குறித்து, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளிடமும் வலியுறுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த அமைப்பில், 55 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)