பா.ஜ.,வை எதிர்த்து ராகுல் போட்டியிடட்டும்

திருவனந்தபுரம் : தனது பலத்தை நிரூபிக்க ராகுல், பா.ஜ., போட்டியிடும் தொகுதி ஒன்றில் போட்டியிட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

விமர்சனம்



காங்., தலைவர் ராகுல், அமேதி தொகுதியில் மட்டுமின்றி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார். இதை கேரளாவில் உள்ள மற்ற கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

நெருக்கடி



இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியம் இல்லை. ராகுல், இடதுசாரிகளை எதிர்த்து தான் போட்டியிடுகிறார். பா.ஜ.,வை எதிர்த்து அல்ல. இடதுசாரிகளை எதிர்த்து போட்டியிடும் காங்.,க்கு கடும் நெருக்கடியை கொடுப்போம். ராகுல் தனது பலத்தை நிரூபிக்க வேண்டுமானால் பா.ஜ., போட்டியிடும் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)