நாட்டுப்புற கலைஞர்கள் கனிமொழிக்கு பிரசாரம்

கனிமொழிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள, நாட்டுப்புற கலைஞர்கள், துாத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி, 2006 - 11ல், பொங்கலை முன்னிட்டு, சென்னையின் பல இடங்களில், 'சங்கமம்' என்ற பெயரில், கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். அதன்படி, மக்கள் கூடும் முக்கிய சந்திப்புகளில், பாடல், நாடகம், தெருக்கூத்து, நாதஸ்வரம், தவில் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதற்காக, தமிழகத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாட்டுப்புற கலைஞர்கள், சென்னையில் முகாமிட்டனர். அவசர உலகில், இயந்திரம் போல் வாழ்ந்த, சென்னைவாசிகளுக்கு, அந்த கலை நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியை தந்தது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, துாத்துக்குடி தொகுதியில், கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, பல்வேறு இடங்களில் இருந்தும், நாட்டுப்புற கலைஞர்கள், துாத்துக்குடிக்கு சென்றுள்ளனர்.
- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)