கரூரில் தேர்தலை நிறுத்த சதி: தம்பிதுரை குற்றச்சாட்டு

கரூர்:''கரூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த, முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜி சதி செய்கிறார்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை கூறினார்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, லிங்கமநாயக்கன்பட்டியில், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளால் தாக்கப்பட்ட, அ.தி.மு.க., தொண்டர்கள் இருவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை, நேற்று அவர்களை சந்தித்து, உடல்நலம் விசாரித்தார்.


பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அரவக்குறிச்சி லிங்கமநாயக்கன்பட்டியில், அ.தி.மு.க., தொண்டர்களை, தி.மு.க.,வினர் தாக்கியுள்ளனர்.எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, இத்தகைய நடவடிக்கையில் இறங்குகின்றனர். தி.மு.க., ஆளும் கட்சியாக வந்தால், இன்னும் என்ன நடக்குமோ என, மக்கள் அஞ்சுகின்றனர்.வன்முறையை ஏற்படுத்தி, கரூர் லோக்சபா தொகுதியில் தேர்தலை நிறுத்த, செந்தில் பாலாஜி சதி செய்து வருகிறார். ஏற்கனவே, அரவக்குறிச்சியில் தேர்தலை நடத்த விடாமல் செய்தார். கரூர் தொகுதியில், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், அ.தி.மு.க., வெற்றி பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கற்பூரத்தால் காயம்கிருஷ்ணராயபுரம் தொகுதியில், தம்பிதுரை பிரசாரம் செய்தபோது, பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது, தட்டில் எரிந்து கொண்டிருந்த கற்பூரம், தம்பிதுரை கையில் பட்டு, காயம் ஏற்பட்டது. இதனால், கரூர் அரசு மருத்துவமனையில், அவர் ஊசி போட்டுக் கொண்டார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)