இலங்கையின் கைக்கூலி வசந்தகுமார்: பிரசாரத்தில் பொன்னார் குற்றச்சாட்டு

நாகர்கோவில்: ''கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி,'' என, மத்திய கப்பல் துறை, இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.


கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் நேற்று, பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் அளித்த பேட்டி:இலங்கையில், 1.50 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த, ராஜபக்சேயின் வேட்பாளராக போட்டியிடுபவர் தான், காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார்.இவர், இலங்கை அரசுக்கு ஆதரவாக, 'குமரி மாவட்டத்தில் அமையவுள்ள வர்த்தக துறைமுகத்தை தடுப்பேன்' என, கூறியுள்ளார். இவர், இலங்கை அரசின்கைக்கூலி.வசந்தகுமார் நடத்தும் நிறுவனம் மூலமாக, வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. எனவே, தேர்தல் அலுவலகமாக செயல்படும் அந்த நிறுவனத்தை கண்காணிப்பதோடு, அதன் மீது, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)