தி.மு.க.,வை அழிக்கும் சக்தியாக மாற வேண்டும்: பெண்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

திட்டக்குடி: 'கடலூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டிபாசிட் இழப்பார்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

அ.தி.மு.க., கூட்டணியில் கடலூர் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து, நிறுவனர் ராமதாஸ் திட்டக்குடி, ராமநத்தத்தில் பிரசாரம் செய்து, பேசியதாவது: மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையில், மக்களுக்கான ஆட்சி அமைய உள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை வரவே இல்லை. அதற்குள் விவசாயிகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் தருவோம் என சிலர் கூறுகின்றனர். அதை பெறுவதற்கு அடிப்படைத்தகுதி மாத வருமானம் ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும். எனவே, அது சாத்தியமற்றது.

ராகுல் என்று பெயர் வைத்திருப்பவர் சொல்வதெல்லாம் நடக்கும் என்று இங்கே ஒருவர் சொல்லிக் கொண்டு திரிகிறார். வேலிக்கு ஓணான் சாட்சி. ஸ்டாலினுக்கு தமிழக முதல்வரை திட்டவில்லை என்றால் தூக்கம் வராது. 1948ல் ஓ.பி.ஆர்., மதுவிலக்கை கொண்டு வந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின்பு கருணாநிதி மீண்டும் மதுவை கொண்டு வந்து தமிழகத்தை நாசம் செய்தார்.மதுவால் பாதிப்படைந்துள்ள தாய்மார்கள், நாட்டிற்கு தேவையில்லாத தி.மு.க.,வை அழிக்கும் சக்தியாக மாற வேண்டும்.

தி.மு.க., ஒரு வன்முறை கட்சி. அது நாட்டிற்கு தேவை இல்லை. தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பது பத்மாசுரன் பெற்ற வரத்தால் அவனே அழிந்துபோனதை போலத்தான். இளைய தலைமுறையினர் இன்று விழிப்புடன் உள்ளனர். கடலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் டிபாசிட் இழப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)