'ஆப்பிளுக்கு போடுங்க ஓட்டு' : சீனிவாசனின் தீராத 'காமெடி'

கன்னிவாடி: திண்டுக்கல் லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக, ஆப்பிள் பழத்திற்கு ஓட்டுக்கேட்டு, அதிர வைத்தார் வனத்துறை அமைச்சர், சீனிவாசன்.

அமைச்சர் சீனிவாசன் கூட்டங்களில் உளறிக்கொட்டி, சர்ச்சையில் சிக்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் நடந்த கூட்டத்தில், பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற, அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், ''அழகிரியை பின்னுக்குத் தள்ளி, குறுக்கு வழியில் தலைவரானவர் ஸ்டாலின். 6,000 ரூபாய் தருவதாக, பிரதமர் மோடி, கூறியதால், 'நானும் தருகிறேன்' என, ராகுல் அறிவிக்கிறார்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில், தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் என பேசியுள்ளார்.

ஒசூர் ஒரு நகர்தான். ஆனால், மாவட்டம் என உளறுகிறார்,'' என்றவர், ''தற்போதைய தேர்தல், ஒரு தர்ம யுத்தம். பா.ம.க., வேட்பாளருக்கு, ஆப்பிள் சின்னத்தில் ஓட்டளியுங்கள்,'' என்றார்.

மேடையில் இருந்த, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அ.தி.மு.க., அமைப்பு செயலர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் திகைத்தனர்.அருகில் இருந்த பத்திரிகையாளர்கள், 'மாம்பழம்... மாம்பழம்...' என்றதும், தன் தலையில் அடித்தபடி, ''இதோ ஊடகத்தினர் எடுத்துக் கொடுக்கின்றனர். மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்,'' என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)