தேர்தலுக்காக கூடுதல் பஸ்கள்

சென்னை: தேர்தலில் ஓட்டு போட வெளியூர் செல்வோருக்கு வசதியாக, கூடுதல் பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளன.

தமிழகத்தில், லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்கிறது. அன்றைய தினம், பொது விடுமுறையாகும். மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என, தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் உள்ளோர், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று, ஓட்டு போட தயாராகி வருகின்றனர்.

அதற்கேற்ப, தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்பதிவுக்கேற்ப, வழக்கத்தை விட, கூடுதல் பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)