யார் உங்கள் தலைவர்?: எதிர்கட்சிக்கு உத்தவ் தாக்கரே கேள்வி

மும்பை : எங்கள் தலைவர் மோடி. உங்கள் தலைவர் யார் என எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார். குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.,வுடன் பல்வேறு கொள்கை வேறுபாடுகள் இருந்தன. அனைத்து சர்ச்சைகளும் இன்று முடிவுக்கு வந்து விட்டன. இந்துத்துவா மற்றும் தேசபக்தி கொள்கைகளால் இரு கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. இந்துத்துவா தான் நமது மூச்சு; அது இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது என என் தந்தை பால் தாக்கரே கூறுவார்.பா.ஜ., - சிவசேனா பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்ததும் அதனை பல அரசியல் கட்சிகள் கொண்டாடின. இன்று அவர்கள் ஓடி ஒழிந்துவிட்டனர். ஏறக்குறைய 56 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. அவர்கள் இதயங்களால் ஒன்றுபடவில்லை. எங்களுக்கு ஒரே தலைவர் தான். உங்களில் யார் தலைவர்? உங்களின் பிரதமர் யார்?
அனைவருக்கும் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏற்கனவே பிரதமர் பதவிக்காக அவர்களுக்குள் சண்டை துவங்கி விட்டது. எங்களுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே இருந்த பிரச்னைகளை பாஜவிடம் நேரடியாக எழுப்பினோம். தற்போது அவர்களுடன் பேசி, பிரச்னைகளை தீர்த்து, முழு மனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)