ஊழல் தான் மெகா கூட்டணி அடித்தளம்: மோடி

ஆலோ: ஊழலில் பசை போட்டு ஒட்டவைத்து அடித்தளம் அமைத்தது தான் மெகா கூட்டணி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேச மாநிலம் ஆலோ பகுதியில் இன்று பிரசாரம் செய்தார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.,வின் முயற்சியால் அருணாச்சலில் வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. முந்தைய அரசுகள் புறக்கணித்த போது வடகிழக்கு மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை. நானும் மற்ற மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து இங்கு வருவதால் டில்லியுடன் வடகிழக்கிற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது.
குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடிப்பவர்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் மீண்டும் வர அனுமதிக்காதீர்கள். ஊழலில் பசை போட்டு ஒட்டி அடித்தளம் அமைத்து உருவாக்கப்பட்டது தான் மெகா கூட்டணி. இந்தியாவின் சாதனைகளால் எஜமானர்கள் வருத்தம் அடைந்துள்ளதுடன், சந்தேகமும் கொண்டுள்ளனர் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)