ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் மோடி பிரசாரம்

ஐதராபாத், ''ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, மாநில நலனில் அக்கறை இல்லை; அவரது சொந்த நலனில் மட்டுமே அக்கறை உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில், பிரதமர் மோடி, நேற்று சூறாவளி பிரசாரம் செய்தார்.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம் 11ல், லோக்சபா மற்றும் சட்டசபைக்கு ஒன்றாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது.இந்நிலையில், ஆந்திராவின் கர்ணுால் மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:தே.ஜ., கூட்டணி ஆட்சியில் தான், ஆந்திராவின் முதல் தேசிய கடல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் துவங்க, அனுமதி அளிக்கப்பட்டது. அனந்தபூர் மாவட்டத்தில், முதல் மத்திய பல்கலை துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.இந்த காவலாளி ஆட்சியில்தான், ஆந்திர நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மாநில அரசின் ஒத்துழைப்பு மட்டும் இருந்திருந்தால், இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றி இருக்க முடியும்.ஆனால் இந்த மாநிலத்தை ஆண்ட முதல்வருக்கு, மக்கள் நலனிலும், மாநில நலனிலும் அக்கறை இல்லை. அவர், ஊழலையும், குடும்ப அரசியலை வளர்ப்பதிலுமே கவனமாக இருக்கிறார்.ஆந்திராவுக்கு வழங்கப்பட்ட வளர்ச்சி நிதி பற்றி கணக்கு கேட்டதும், அவர் மாநில நலனில் அக்கறை காட்டுவதை போல நடித்தார்; அவர் சந்திரபாபு அல்ல, 'பல்டி' பாபு.இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து, தெலுங்கானா மாநிலம், மெஹபூப்நகரில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:தெலுங்கானாவில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை, ஒன்றாக நடத்தியிருந்தால், அரசுக்கு செலவு மிச்சமாகி இருக்கும். தோல்வி பயம் காரணமாக, சட்டசபை தேர்தலை முன்கூட்டியே, முதல்வர் சந்திரசேகர ராவ் நடத்தினார்.மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னும், அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய, இரண்டு மாதங்கள் தாமதித்தார்; அதுவரை, மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டன.யாரோ ஒரு ஜோதிடரின் வார்த்தைக்காக, அவர் காத்திருந்தார். மாநில நலனை முடிவு செய்ய வேண்டியது மக்களா, ஜோதிடரா என்பதை, நீங்களே முடிவு செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும், பிரதமர் மோடி பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)