வடக்கு மும்பை தொகுதியில் நடிகை ஊர்மிளா போட்டி

புதுடில்லி, சமீபத்தில், காங்., கட்சியில் இணைந்த, பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மதோந்த்கருக்கு, வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.ரங்கீலா, சமத்கார் உள்ளிட்ட ஹிந்தி படங்களிலும், கமல் நடித்த, இந்தியன் என்ற தமிழ் படத்திலும் நடித்தவர், ஊர்மிளா, 45. சமீபத்தில், காங்., தலைவர் ராகுலை சந்தித்த ஊர்மிளா, அந்த கட்சியில் இணைந்தார்.இதையடுத்து, 'வரும் லோக்சபா தேர்தலில், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, ஊர்மிளா பிரசாரம் செய்வார்' என, காங்., சார்பில் அறிவிக்கப்பட்டது.தேர்தலில் போட்டியிடுவதற்காக, காங்., கட்சியில் சேரவில்லை என்றும், காங்கிரசின் கொள்கைகள் பிடித்ததால், சேர்ந்ததாகவும், ஊர்மிளா கூறி இருந்தார்.இந்நிலையில் நேற்று, 'வடக்கு மும்பை தொகுதியில் ஊர்மிளா போட்டியிடுவார்' என, காங்., கட்சி அறிவித்துள்ளது. ஒடிசா, பீஹார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும், காங்., மேலிடம் நேற்று அறிவித்தது.அதில், பீஹார் மாநிலம், சாசாராம் தொகுதி வேட்பாளராக, முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)