மருமகளுக்கு ‛டைவர்ஸ்': சம்பந்திக்கு ‛சீட்'

புதுடில்லி: மனைவியை மகன் பிரிந்ததால் சம்பந்தியை சமாதானப்படுத்துவதற்காக தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளார் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.

லாலுவின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ். இவரது மனைவி ஐஸ்வர்யா. சந்திரிகா ராய் என்பவரின் மகள் தான் ஐஸ்வர்யா. சந்திரிகா ராயின் தந்தை தரோகா பிரசாத், 1970களில் பீகார் முதல்வராக இருந்தவர். அந்த அளவுக்கு பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. டில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த ஐஸ்வர்யா, வெறும் பிளஸ் 2 மட்டுமே படித்த தேஜ்பிரதாப்பை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனது முதலே இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் தேஜ்பிரதாப்.இது பற்றி அவர் கூறும்போது, ‛‛எனது பெற்றோர் முன்பே எனக்கும் மனைவிக்கும் சண்டை நடக்கும். நாங்கள் இருவரும் இருதுருவங்கள். எனக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம். நான் எளிமையான மனிதன். ஆனால் ஐஸ்வர்யா பெரு நகரத்தில் வாழ்ந்த நவீன பெண்'' என்கிறார்.


பீகாரில் ராய் ஜாதியினர் முக்கியமானவர்கள். நில பிரபுக்கள். ஐஸ்வர்யாவை தேஜ்பிரதாப் பிரிந்து சென்றதால் ஒரு பகுதி யாதவர்கள் லாலு மீது கோபத்தில் இருந்தனர். அவர்களை சமாதானம் செய்வதற்காக சந்திரிகா ராய்க்கு சரண் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்துள்ளார். லாலு. இதன் மூலம் யாதவா ஜாதியினரின் கோபத்தை குறைத்துள்ளார் லாலு. அதற்கு முன்பு சரண் தொகுதியில் மனைவி ராப்ரிதேவியை நிறுத்துவற்காகத் தான் லாலு எண்ணி இருந்தார். 2014 தேர்தலில் இதே தொகுதியில் நின்ற ராப்ரி, பா.ஜ., வேட்பாளரிடம் தோ்றறுப் போனார்.இப்போது அந்த தொகுதியில் சம்பந்தி சந்திரிகாவை நிறுத்தி உள்ளார் லாலு. இது தேஜ் பிரதாப்புக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தந்தையின் முடிவைக் கண்டித்து ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியை தேஜ்பிரதாப் ராஜினாமா செய்தார்.


பீகாரில் நிதீஷ்குமார் அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராக இருந்தவர் தேஜ்பிரதாப். ராஷ்ட்ரீய ஜ.த., உடன் கூட்டணியை முறித்து, பா.ஜ., உடன் கூட்டணி அமைத்ததும் தேஜ் பிரதாப்பை கழற்றி விட்டார் நிதீஷ். அமைச்சராக இருக்கும்போதே போஜ்புரி மொழி சினிமாவில் நடித்தவர் தேஜ்பிரதாப். இப்போதும் ருத்ரா - ஒரு அவதார் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

லாலுவுக்கு குடும்பமே முக்கியம்மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ‛உள்ளே' இருக்கும் லாலு, சகட்டுமேனிக்கு தன் குடும்பத்தில் உள்ளவர்களை அரசியலுக்கு கொண்டு வருவதில் கில்லாடி. தனது மூத்த மகன் மிசா பாரதியை பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிட வைத்துள்ளார். இது கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கட்சிக்குள் கலகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த லட்சணத்தில் மிசா பாரதி ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக வேறு இருக்கிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)