சொன்னதும்; செய்யாததும்! என்ன சொல்கிறார் கடலுார் எம்.பி.,

கடலுார் லோக்சபா தொகுதியில், 2014 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் அருண்மொழித்தேவன், தி.மு.க.,- நந்தகோபாலகிருஷ்ணன், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., - ஜெய்சங்கர், காங்., - கே.எஸ். அழகிரி போட்டியிட்டனர். இவர்களில், அருண்மொழித்தேவன் வெற்றி பெற்றார் கடலுார் லோக்சபா


என்ன சொல்கிறார் எம்.பி.,?

* ஐந்தாண்டுகளில், தொகுதி மக்களை சந்தித்தது, எத்தனை முறை?

தொகுதி மக்களை, தினமும் சந்திக்கிறேன். லோக்சபா கூட்டத்தொடர் இல்லாத சமயங்களில், தொகுதி மக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அடிப்படை பிரச்னைகள் குறித்து, மக்கள் என்னை எளிதில் சந்திக்கும் நிலை உள்ளது.

* தொகுதிக்கு நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள்?

கடலுார் - சேலம், தேசிய நெடுஞ்சாலை. ராமநத்தம் - திட்டக்குடி - பெண்ணாடம் வழியாக, கருவேப்பிலங்குறிச்சி வரை, 49 கோடி ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கிடப்பில் இருந்த விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை துரிதப்படுத்த முயற்சி எடுத்து, நடமுறைக்கு கொண்டு வந்துள்ளேன்.நெய்வேலி, என்.எல்.சி., தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.


மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கெடிலம், வெள்ளாறு, மணிமுக்தாறு ஆகியவற்றில், ஆறு இடங்களில், தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கனிம வளத்துறை வருவாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கடலுார் மாவட்டத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.பொதுமக்கள், 150க்கும் மேற்பட்டோருக்கு, பிரதமர் நிவாரண நிதி பெற்றுத் தந்துள்ளேன்.


திருச்சியில் இருந்து கடலுார் முதுநகர் வரை இயக்கப்பட்ட ரயில் சேவையை, திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுத்தேன்.அந்தியோதயா சிறப்பு ரயில், திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள், கடலுாரில் நின்று செல்லவும் ஏற்பாடு செய்துள்ளேன்.


அகில இந்திய அளவில், 543 தொகுதிகளில், தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திய, முதன்மையான, 10 தொகுதிகளில் ஒன்றாக, கடலுார் விளக்குகிறது.


* எத்தனை மசோதாக்களுக்கு ஆதரவாக ஓட்டு அளித்துள்ளீர்கள்?


மத்திய அரசு கொண்டு வந்த முத்தலாக் சட்டம், ஜி.எஸ்.டி., நடைமுறை மற்றும் முற்பட்ட பிரிவினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி கொள்கையின் அடிப்படையில், வெளிநடப்பு செய்துள்ளோம். மற்றபடி, மக்கள் நலத்திட்டங்கள் குறித்த அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்துள்ளோம்.


* உங்கள் செயல்பாடுகளால், தொகுதி மக்களிடம், கட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டுள்ளதா?


உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத குறை, பொதுமக்களுக்கு ஏற்படாத வகையில், அடிப்படை பிரச்னைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு முழு முயற்சி எடுத்துள்ளேன். இதனால், தொகுதி மக்களிடம் அ.தி.மு.க.,விற்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது.


* உங்கள் கட்சி வெற்று பெறுமா?


எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., ஆகியோர் எங்களின் வழிகாட்டி. அவர்கள் வழியில், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிரதான கட்சிகள், எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளதால், வெற்றி நிச்சயம்.

நிறைவேறாத வாக்குறுதிகள்* கடலுார் இயற்கை துறைமுகத்தை ஆழப்படுத்தி, கப்பல் போக்குவரத்து துவங்கி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவோம் என்ற அறிவிப்பு, கானல் நீரானது. அதே நேரம், மத்திய அரசின் முழு ஒத்துழைப்புடன், தனியார் நிறுவனங்கள், செயற்கை துறைமுகத்தை அமைத்து, செயல்படுத்தி வருகின்றனர்


* கடலுார் தொகுதியில், முந்திரி உற்பத்தி அதிகளவில் இருப்பதால், முந்திரி ஏற்றுமதி மண்டலம் அமைப்போம் என்ற வாக்குறுதி கண்டுகொள்ளப்படவில்லை

* கடலுார் மாவட்டத்தில், பெரும்பாலான மக்கள், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். ஆனால், ரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாக உள்ளதால், ரசாயன மண்டலமாக கடலுார் பகுதி மாற்றப்படுவதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட வில்லை

* மாவட்ட தலைநகரான கடலுாரில், முக்கிய விரைவு ரயில்கள் அனைத்தும் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை


* கடலுார் பகுதியில், மீன் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படவில்லைஇலக்கை மிஞ்சியது!கடந்த ஐந்து ஆண்டுகளில், தொகுதி மேம்பாட்டு நிதியாக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மொத்த தொகையும், பரிந்துரை செய்யப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், இலக்கை மிஞ்சி, கூடுதல் தொகையாக, 26 கோடி ரூபாய் வரை, தொகுதி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொகுதியில் இடம்பெற்றுள்ள சட்டசபை தொகுதிகள்:1. திட்டக்குடி - தனி, 2. விருத்தாசலம், 3. நெய்வேலி, 4. பண்ருட்டி, 5. கடலுார், 6. குறிஞ்சிப்பாடி.

இலக்கை மிஞ்சியது!கடந்த ஐந்து ஆண்டுகளில், தொகுதி மேம்பாட்டு நிதியாக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மொத்த தொகையும்,பரிந்துரை செய்யப்பட்டு, பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், இலக்கை மிஞ்சி, கூடுதல் தொகையாக, 26 கோடி ரூபாய் வரை, தொகுதி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறைமொத்த வாக்காளர்கள்: 13,42,320
ஆண்கள்: 6,64,313
பெண்கள்: 6,77,928
திருநங்கையர்: 79


கடலுார் லோக்சபா தொகுதியில், 2014 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் அருண்மொழித்தேவன், தி.மு.க.,-நந்தகோபாலகிருஷ்ணன், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., - ஜெய்சங்கர், காங்., - எஸ். அழகிரிபோட்டியிட்டனர். இவர்களில்,அருண்மொழித்தேவன் வெற்றி பெற்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)