நிறைவேறியதா மக்கள் எதிர்பார்ப்பு? என்ன சொல்கிறார் திருவள்ளூர் எம்.பி.,

ஐந்து ஆண்டுகளில் மக்களை சந்தித்தது எத்தனை முறை?


வாரந்தோறும் இரண்டு முறையாவது தொகுதிமக்களை சந்தித்து, குறைகளை கேட்பேன். அவற்றை, அதிகாரிகள் வழியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளேன்.


தொகுதிக்கு நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள்?


திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரியை தரம் உயர்த்த, தேவையான இடம் கேட்டு, தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசு மருத்துவமனை மட்டும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.திருவள்ளூர் ரயில் நிலையத்தில், முதல் கட்டமாக, பாலக்காடு விரைவு ரயில் நின்று செல்கிறது. விரைவில் வெஸ்ட் கோஸ்ட் மற்றும் கோவை ரயில்களும் நின்று செல்லும்.


பழவேற்காடு - பசியாவரம் மேம்பால பணிக்கு, தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. பழவேற்காடு முகத்துவாரம் துார்வார, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடம்பத்துார், மீஞ்சூர் மேம்பால பணிகள் விரைவில் முடியும்.


கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம், கன்னியம்மன் கோவில் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம்; பட்டாபிராம் சைடிங்கில் மேம்பாலம் ஆகியவை கட்ட அனுமதி தரப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளுக்கு, 'டயாலிசிஸ்' இயந்திரம், நகராட்சிகளுக்கு கழிவுநீர் வாகன ஏற்பாடு,சமுதாய கூடம், அங்கன்வாடி, நுாலகம், ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

உயர்கோபுர மின்விளக்கு, குடிநீர்சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


எத்தனை மசோதாவுக்கு ஆதரவு அளித்தீர்கள்?


லோக்சபாவில், தொகுதி தொடர்பாக, 606 கேள்விகள் எழுப்பியுள்ளேன். கட்சி தலைமை அனுமதித்தமசோதாக்களுக்கு ஆதரவு அளித்துள்ளேன்.


உங்கள் செயல்பாடுகளால், தொகுதி மக்களிடம்கட்சிக்கு நற்பெயர்ஏற்பட்டுள்ளதா?என் அலுவலகத்துக்கு வந்து செல்வோருக்கு, கட்சி பாரபட்சமின்றி, தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளேன். எனவே, தொகுதி மக்கள் எனக்கு முழு ஆதரவு தருவர்.


இந்த தேர்தலில் உங்கள் கட்சி வெற்றி பெறுமா?


எங்கள் கட்சியும், கூட்டணியும் வலுவாக உள்ளதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்...


மாவட்ட தலைநகரான திருவள்ளூரில், அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். புதிதாக, இன்ஜி., - கலை கல்லுாரிகள் துவங்க வேண்டும். கோவை, பெங்களூரு, பழனி, வெஸ்ட்கோஸ்ட் என, 10 விரைவு ரயில்களாவது, திருவள்ளூர் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.


பூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டம், நெரிசல் இல்லாத பஸ் நிலையம்; ஆவடியில், அனைத்து விரைவு ரயில்களுக்கும் நிறுத்தம்; பொன்னேரி -- குண்ணமஞ்சேரியில் ஆற்றின் குறுக்கேயும், பழவேற்காடு - - பசியாவரம் இடையே, ஏரியின் குறுக்கேயும் பாலம் அமைக்க வேண்டும்.


பொன்னேரி புறவழிச்சாலை,பழவேற்காடு ஏரி துார்வாருதல், கடம்பத்துார், புட்லுார், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகள், நிலுவையில் உள்ளன.


திருவள்ளூர் மாவட்டத்தில், மாம்பழ கூழ் தொழிற்சாலை, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு பகுதிகளில் வேளாண்சார் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் போன்றவை,மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளன.


தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகள்1. திருவள்ளூர், 2. பொன்னேரி - தனி, 3. கும்மிடிப்பூண்டி, 4. ஆவடி,5. பூந்தமல்லி - தனி, 6. மாதவரம் - சென்னை மாவட்டம்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)