அலறும் கரூர் காங்கிரசார்!

'கரூர் தொகுதியில், காங்., சார்பில், மீண்டும் ஜோதிமணி போட்டியிடுவார்' என்ற தகவலால், காங்., கட்சியினர் உச்சக் கட்ட அதிருப்தியில் உள்ளனர்.


தமிழகம், புதுச்சேரியில், தி.மு.க., கூட்டணியில், 10 லோக்சபா தொகுதிகளில், காங்., போட்டியிடுகிறது. இந்நிலையில், கரூர் தொகுதி, காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அதில் மீண்டும் ஜோதிமணி போட்டியிட இருப்பதாக கசிந்த தகவலால், கட்சியினர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.


காங்., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, ராகுலிடம் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, கரூர் தொகுதியில் போட்டியிட, மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, 'சீட்' வாங்கினார். அப்போது, படுதோல்வியடைந்து, தொகுதி பக்கமே தலை காட்டாமல் இருந்தார்.அடுத்து, 2016 சட்டசபை தேர்தலில், 'அரவக்குறிச்சி தொகுதியை, காங்., கட்சிக்கு ஒதுக்காவிட்டால், சுயேச்சையாக போட்டியிடுவேன்' என, அறிவித்தார்.


அப்போதைய காங்., தலைவர் இளங்கோவன் எச்சரித்த பின் அமைதியானார்.வரும் லோக்சபா தேர்தலில், காங்., கட்சி, திண்டுக்கல் தொகுதியை கோரி உள்ளது. தி.மு.க., அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதால், கரூர் தொகுதியை கேட்டு உள்ளது.நேற்று முன்தினம், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்ப மனு அளித்த, 12 பேரும், சென்னையில் நடந்த நேர்காணலுக்கு சென்றனர். தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதால், மனு கொடுத்த அனைவரையும் ஒன்றாக அழைத்து பேசி, அனுப்பி விட்டனர்.


அவர்கள், அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, 'கரூர் தொகுதியில், காங்கிரஸ் தான் போட்டியிட உள்ளது. 'ஜோதிமணிக்கு, 99 சதவீதம் வாய்ப்பு உள்ளது' எனக் கூறியுள்ளனர். இதையறிந்த, உள்ளூர் காங்., நிர்வாகிகள், ஏற்கனவே, தனக்கு வேண்டியவரான சின்ன சாமியை, மாவட்ட தலைவராக நியமித்து, கட்சி செயல்பாட்டை முடக்கி வைத்துள்ள ஜோதிமணி, மீண்டும் போட்டியிட்டால், அவருக்கு எப்படி வேலை செய்வது என்ற அதிர்ச்சியில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)