பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்த காங்.,: யோகி தாக்கு

லக்னோ: காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்தது. ஆனால் பா.ஜ., வெடி குண்டு, தோட்டாக்களை கொடுத்தது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.

உ.பி., மாநிலம் சஹாரன்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: 26/1 ல் நடந்த மும்பை தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை முழுமையாக குற்றம் சாட்ட முடியாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாம் பிட்ரோடா கூறியுள்ளார். இவரின் கருத்தால் நாட்டிற்கே அவமானமாகி உள்ளது.

பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் பயங்கரவாதிகளுக்கு பிரியாணியை அளிக்கிறது.அதே நேரத்தில் பா.ஜ., அரசு பயங்கரவாதிகளுக்கு வெடிகுண்டு மற்றும் தோட்டாக்களை அளித்து வருகிறது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)