தந்தையை ஓரம்கட்டிய தனயன்

லக்னோ: உ .பி.,மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான முலாயம்சிங்கிற்கு போட்டியிட அவரது மகன் அகிலேஷ் வாய்ப்பு வழங்கவில்லை. தந்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற அசாம்கார் தொகுதியில் தானே போட்டியிடுவதாக அகிலேஷ் அறிவித்துள்ளார்.

உத்திரபிரசேத்தில் தான் நாட்டிலேயே அதிக எம்.பி., தொகுதிகள் 80 உள்ளன. இதன் அடிப்படையிலேயே பார்லி., வெற்றி பெறும் வாய்ப்பு அமையும். இங்கு ஆளும் பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்க எதிரும், புதிருமான சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் இணைந்துள்ளன. இந்த இரு கட்சிகள் ஓட்டுக்கள் பெரும் வெற்றியை பெற்றுத்தரும் என நம்புகின்றன.

அகிலேஷ் இன்று 2 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் அகிலேஷ் அசாம்கார் , அசாம்கான் என்ற மூத்த நிர்வாகி ராம்பூர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முலாயம்சிங்கின் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் என அகிலேஷ் இந்த தொகுதியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனக்கு தானே மகுடம்




இக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர் பட்டியலில்; அகிலேஷ், ராம்கோபால்யாதவ், ஜெயாபச்சன், டிம்பிள் யாதவ் (அகிலேஷ் மனைவி) அசாம்கான், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலிலும் முலாயம்சிங் பெயர் இடம்பெறவில்லை. ஆக தந்தையை தனயனே ஒதுக்குவதாக கட்சி தொண்டர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அகிலேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையை மீறித்தான் தனக்கு தானே தலைவராக மகுடம் சூட்டி கொண்டார். தற்போது அகிலேஷ் 2 வது தவறை புரிந்துள்ளார். இதனால் உள்கட்சிக்குள்ளே குழப்பமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இது வெற்றியை பாதிக்கும் என்று அகிலேஷ் ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)