லீலாவதி கொலைக்கைதி சகோதரரை சந்தித்த மார்க்சிஸ்ட் வேட்பாளர்

மதுரை, மதுரையில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், ரகசியமாக சென்று கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் பெரியமருதுவின் சகோதரர் எஸ்ஸார் கோபியை சந்தித்து ஆதரவு கேட்டது மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இதற்காக தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளை
சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். தி.மு.க.,வும் தனது பங்கிற்கு தேர்தல் பொறுப்பாளராக 11 பேரை கொண்ட குழுவை நியமித்துள்ளது. இதில் எஸ்ஸார் கோபியும் ஒருவர். இவர் அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்து ஸ்டாலின் ஆதரவாளராக மாறியவர். இவரது சகோதரர்தான் பெரியமருது.
லீலாவதி கொலை
ரேஷன் கடைகளில் தி.மு.க.,வினர் மாமூல் வாங்குவதை எதிர்த்ததால், மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்த லீலாவதி, 1997 ல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பெரிய மருது உட்பட 7 பேர் மதுரை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்தாண்டு நன்னடத்தை காரணமாக பெரியமருது விடுவிக்கப்பட்டது மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜா என்பவர் கொலை வழக்கில், பெரியமருது பெயர் இருந்ததால், 'நன்னடத்தை விடுதலை' ரத்து செய்யப்பட்டு, மீண்டும் லீலாவதி கொலை வழக்கில் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
'அப்படிபட்டவரின் சகோதரரை சந்தித்து ஆதரவு கேட்டதை லீவாவதி ஆன்மா மன்னிக்குமா' என மார்க்சிஸ்ட் கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர். கட்சி முக்கிய நிர்வாகிகளும் இதை ஏற்கவில்லை.
'இதனால் தேர்தலில் தனக்கு இது பின்னடைவை ஏற்படுத்துமோ' என்ற கலக்கத்தில் இருக்கிறார் வெங்கடேசன்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)