ஜெகன் மோகனுக்கு ரூ.375 கோடி சொத்து

அமராவதி : ஒய்.எஸ்.ஆர்., காங் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு ரூ.375 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் தனக்கு சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவென்டுலா சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜெயன்மோகன் ரெட்டி நேற்று தாக்கல் செய்தார். அவர் தனது வேட்புமனுவில் தனக்கு ரூ.339 கோடிக்கும் அதிகமான அசையும் சொத்துக்களும், ரூ.35 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2014 ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட போது ஜெகன் மோகன் தனது வேட்புமனுவில் தனக்கு ரூ.343 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தொழிலதிபரான இவரது மனைவி பாரதி ரெட்டியின் சொத்து மதிப்பும் ரூ.71 கோடியில் இருந்து ரூ.124 கோடியாக அதிகரித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டியின் 2 மகள்கள் பெயரில் ரூ.11 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 வயதாகும் ஜெகன்மோகன் மீது 31 கிரிமினல்கள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கும் அடக்கம். இருப்பினும் எந்த வழக்கிலும் தண்டனை பெறவில்லை.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)