சிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது...! ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்

ஆன்மிகத்தில் நாட்டம்உடையவர், ரஜினி. தி.மு.க.,வினரோ, ஹிந்துக்களை இழிவாக பேசுவதையும், யாகசாலை மற்றும் பூஜைகள் குறித்து தரக்குறைவாக விமர்சிப்பதையும், வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில், விழா ஒன்றில் பேசிய, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், யாகசாலை பூஜை குறித்து, சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு, ஹிந்துக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.மேலும், ஸ்டாலினின் ஹிந்து விரோத பேச்சு, ரஜினி ரசிகர்களிடையே, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்கள், தங்களின் முகநுால் பக்கங்களில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு, அதிக தகவல்களை பகிர்கின்றனர். குறிப்பாக, 'சுடலை' என்ற பெயரில், ஸ்டாலினை
வறுத்தெடுக்கின்றனர்.பேட்ட சினிமாவில் ரஜினி, 'சிங்காரம் நீ என்ன தொட்டிருக்கக்கூடாது. ஆனா, தொட்டுட்ட... உன்ன விட்டா, நீ தொடர்ந்து வந்துட்டே இருப்ப. உன்ன விட மாட்டேன்' என, வசனம் பேசுவார்.தற்போது, ஸ்டாலினை, சுடலை என்ற பெயருக்கு பதிலாக, 'சிங்காரம்' என குறிப்பிட்டு, ரஜினி ரசிகர்கள் முகநுாலில், மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளனர்.அதில், 'ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசும், ஸ்டாலினுக்கு, லோக்சபா, 18 சட்டசபை தொகுதி, இடைத்தேர்தல் மற்றும் வரப்போகும் சட்டசபை பொதுத் தேர்தலில், தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அதற்காக, தலைவர் ரஜினி வழியில், ஆன்மிக அரசியல் செய்வோம்.
'தலைவர் ஏற்கனவே அறிவித்தபடி, மக்கள் நலன், நதிகள் தேசிய மயம் கொள்கைகளை, தேர்தல் வாக்குறுதியாக தரும் கட்சிக்கே, 40 லோக்சபா, 18 சட்டசபை இடைத் தேர்தலில் ஆதரவு தருவோம். ஒரு போதும் ரஜினி ரசிகன் ஓட்டு, தி.மு.க.,வுக்கு அல்ல' என, பதிவிட்டு வருகின்றனர்.ஹிந்துக்களுக்கும், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எதிராகவும், காய் நகர்த்தி வரும் கட்சிகளுடன், தி.மு.க., கூட்டணி அமைத்து, தேர்தல் களம் காண்பதால், ரஜினி ரசிகர்களின் ஆதரவு, தி.மு.க.,வுக்கு இல்லை என்ற மனநிலை, ரசிகர்களிடம்
ஏற்பட்டுள்ளது.'ரஜினி ரசிகர்களின் கோபம், தேர்தலில் வெளிப்படப் போவது உறுதி. இதன் வெளிப்பாடே, 'சிங்காரம்' என்ற பெயரில், ஸ்டாலின் குறித்தும்,
கூட்டணி கட்சிகள் குறித்தும், முகநுாலில், விமர்சனம் செய்யப்படுகிறது' என, மூத்த ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)