பா.ஜ., வெற்றி உறுதி: சிவசேனா

மும்பை : தேசியவாத காங்., தலைவர் சரத்பவாரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருப்பது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கான அடையாளம் என சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாம்னா கட்டுரையில், சரத்பவாரும், மாயாவதியும் லோக்சபா தேர்தல் போட்டியில் இருந்து விலகி இருப்பதால் பா.ஜ., வெற்றி பெறுவதற்கான அடையாளம். இவர்களின் முடிவால் மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கான பாதை தெளிவாகி உள்ளது. இவர்கள் பிரதமர் போட்டியில் இருந்து விலகி இருப்பதும் மிக முக்கியமானது. சரத் பவார், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் தனது சொந்த குடும்பம் மற்றும் கட்சி உறுப்பினர்களை ஒன்றுபடுத்த முடியவில்லை.

உ.பி.,யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு கிடைக்கும் ஓட்டுக்களை காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா தடுப்பார். அம்மாநிலத்தில் மாயாவதி மற்றும் காங்., கிற்கு இருக்கும் ஓட்டு வங்கி சமமானது என்பதே இதற்கு காரணம். தேசியவாத காங்., ஐ சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் பா.ஜ.,வில் இணைந்துள்ளது சரத்பவாருக்கு பெரிய பின்னடைவு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)